fbpx

அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை வேண்டுமா…? இந்த புதிய இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்…!

மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

2022-2023 ஆம்‌ கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ செயல்படுத்தப்படும்‌ போஸ்ட்‌ மெட்ரிக்‌ (10ம்‌ வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்‌) கல்வி உதவித்தொகை திட்டம்‌ மற்றும்‌ பிரிமெட்ரிக்‌ (9 மற்றும்‌ 10ம்‌ வகுப்புகள்‌) ஆகிய திட்டங்களுக்குரிய escholarship.tn.gov.in என்ற இணையதளம்‌ விரைவில்‌ திறக்கப்படவுள்ளது.

மேற்கண்ட திட்டங்களின்‌ கீழ்‌ பயன்பெற தகுதி வாய்ந்த பழங்குடியினர்‌ நல மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும்‌ புதுப்பித்தல்‌ கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சாதிச்சான்று, வருமான சான்று, மதிப்பெண்‌ சான்று, சேமிப்பு கணக்கு புத்தக நகல்‌, ஆதார்‌ எண்‌, வருகை சான்று, தேர்ச்சி பெற்ற நகல்‌ உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன்‌ escholarship.tn.gov.in கல்வி இணையதள வழியாக பள்ளிகள்‌/கல்லூரிகள்‌ மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை சம்மந்தப்பட்ட கல்லூரிகள்‌ மூலமாகவும்‌, பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்ட கல்வி அலுவலர்கள்‌ மூலமாகவும்‌ விண்ணப்பித்து தருமபுரி மாவட்டத்திலுள்ள மாணவ/மாணவியர்கள்‌ பயன்பெறலாம்‌ என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இந்தியாவில் கொரோனா மாறுபாடு..‌.! மக்கள் இதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்...! மத்திய அமைச்சர் தகவல்...!

Fri Jan 6 , 2023
கொரோனா மாறுபாடு ஒமிக்ரான்‌ வழக்குகள் நாட்டில் கண்டறியப்பட்டதை அடுத்து, மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டார். மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், அரசாங்கம் அவ்வப்போது வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சர் எச்சரித்தார். கொரோனா மாறுபாடு தொடர்ந்து வரும், பொதுமக்கள் அனைவரும் அரசாங்கம் செல்லும் தகவல்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். என்ன பண்ற தகவல்களை நம்ப வேண்டாம் என அவர் கூறினார். […]

You May Like