fbpx

யாரும் மறக்காதீங்க… விவசாயத்திற்கு ரூ.10,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம்….! யாரெல்லாம் இதற்கு தகுதி…? விவரம் இதோ

மானியத்தில்‌ மின்மோட்டார்‌ பம்ப்‌ செட்டுகள்‌ வழங்கும்‌ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; வேளாண்மை பொறியியல்‌ துறையின்‌ மூலமாக, விவசாயிகளின்‌ உற்பத்தியை பெருக்கவும்‌, வருமானத்தினை அதிகரிக்கும்‌ பொருட்டு, பல்வேறு திட்டங்கள்‌ விவசாயிகளுக்கு மானியத்தில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையில்‌ அறுவடைக்குப்‌ பின்‌ தொழில்நுட்பத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தாழ்த்தப்பட்ட விவசாயிகள்‌ மதிப்புக்‌ கூட்டும்‌ இயந்திரங்களான, மாவரைக்கும்‌ இயந்திரங்கள்‌, எண்ணெய்‌ பிழிந்தெடுக்கும்‌ செக்கு, கேழ்வரகு சுத்தப்படுத்தி கல்நீக்கும்‌ இயந்திரம்‌, சிறிய வகை நெல்‌ அரைக்கும்‌ இயந்திரம்‌ நிலக்கடலை தோல்‌ உரித்து தரம்‌ பிரிக்கும்‌ இயந்திரம்‌, மற்றும்‌ தேங்காய்‌ மட்டை உரிக்கும்‌ இயந்திரம்‌ போன்ற இயந்திரங்கள்‌ வாங்குவதற்கு 40% மானியம்‌ அல்லது அரசால்‌ நிர்ணயம்‌ செய்யப்பட்ட உச்சவரம்புத்‌ தொகை இவற்றில்‌ எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில்‌ பயன்பெற 7 இயந்திரங்களுக்கு ரூ.3.50/- லட்சத்திற்கான மானியம்‌ தயார் நிலையில்‌ உள்ளது. இத்திட்டத்தில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம்‌ வழங்கப்பட உள்ளது.

மானியத்தில்‌ மின்மோட்டார்‌ பம்ப்‌ செட்டுகள்‌ வழங்கும்‌ திட்டம்‌

நீர்‌ பயன்பாட்டு திறனை மேம்படுத்தவும்‌, பயிர்‌ உற்பத்தி திறனை அதிகரிக்கவும்‌ நிலத்தடிநீர்‌ பாசனத்தில்‌ மின்மோட்டார்‌ பம்ப்‌ செட்டுகள்‌ மிக முக்கிய பங்கு வகிப்பதால்‌ பழைய திறன்‌ குறைந்த பம்பு செட்டுகளை மாற்றி அமைக்க முடியாத நிலையில்‌ உள்ள சிறு மற்றும்‌ குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தின்‌ மூலம்‌ மின்மோட்டார்‌ பம்ப்‌ செட்டுகள்‌ 50% மானியத்தில்‌ அல்லது ரூ.10,000/- இதில்‌ எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும்‌. அதிகபட்சமாக 10 குதிரைத்‌ திறன்‌ வரை உள்ள மின்மோட்டார்‌ பம்ப்‌ செட்டுகள்‌ வாங்கிட மானியம்‌ வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில்‌ பயன்‌ பெற விரும்பும்‌ விவசாயிகள்‌ விண்ணப்பத்துடன்‌ சிட்டா, அடங்கல்‌, நிலவரைபடம்‌, சிறு விவசாயிகளுக்கான சான்று, (அதிகபட்சமாக மூன்று எக்கர்‌வரை மட்டும்‌ இருக்க வேண்டும்‌) பாஸ்‌ போர்ட்‌ அளவிலான புகைப்படம்‌, விவசாயிகளின்‌ வங்கி கணக்கு எண்‌ மற்றும்‌ மின்‌ இணைப்பு அட்டை மற்றும்‌ ஆதார்‌ அட்டை நகல்‌ இணைக்கப்பட வேண்டும்‌ என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மிகப்பெரிய அதிர்ச்சி... உடல் நலக்குறைவு காரணமாக முக்கிய பிரபலம் காலமானார்...! சோகத்தில் ரசிகர்கள்..

Wed Aug 17 , 2022
பிசிசிஐயின் முன்னாள் செயலாளரும், மூத்த நிர்வாகியும், புகழ்பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான அமிதாப் சவுத்ரியின் அகால மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது . அமிதாப் சவுத்ரி செவ்வாய்க்கிழமை காலை ராஞ்சியில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 62. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது இரங்கல் செய்தியில், ” அமிதாப் சவுத்ரியின் சோகமான மறைவு குறித்து அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அவருடன் நீண்ட காலம் பழகினேன், எங்களின் […]

You May Like