fbpx

காட்டுக்குள் கழுத்தறுக்கப்பட்ட திமுக கவுன்சிலர்.! கைதான கணவன் மனைவி பரபரப்பு வாக்குமூலம்.!

ஈரோடு அருகே நகைக்காக திமுக பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மனைவியிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சோள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரூபா. இவர் திமுக வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். இவரது கணவர் பெயர் தங்கராஜ். இந்த தம்பதியினருக்கு மகனும் மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ரூபா வீட்டு வேலை செய்து தனது குடும்பத்தை கவனித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு ரூபா சென்று இருக்கிறார்.

வேலைக்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மகன், அம்மா வீடு வேலை செய்யும் இடத்தில் சென்று விசாரித்திருக்கிறார். அப்போது ரூபா வேலைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலையில் கரூர் மாவட்டம் குமாரசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த பெண்மணியின் கழுத்தில் இருந்த நகைகளும் திருடப்பட்டிருந்தன. காவல்துறையின் விசாரணையில் இறந்த பெண் ரூபா என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவருடன் வேலை செய்து வரும் ஈரோடு புதூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி நித்யாவை கைது செய்த காவல் துறை விசாரித்தது. இதில் நகை மற்றும் பணத்திற்காக ரூபாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். வேறொரு இடத்தில் வேலை இருப்பதாக கூறி ஆளில்லாத பகுதிக்கு ரூபாவை அழைத்துச் சென்று அவரை கொலை செய்து விட்டு நகைகளை திருடியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கணவன் மற்றும் மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

Next Post

பால் கேட்டு அலறிய 1 1/2 வயது பிஞ்சு குழந்தை.! தந்தையின் செயலால் தாய் எடுத்து விபரீத முடிவு.!

Fri Dec 29 , 2023
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பாலுக்காக குழந்தை அழுதபோது கணவன் மற்றும் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கார்வேபாவிபல்யா லட்சுமி லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஷாலினி மற்றும் சுரேஷ் தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. […]

You May Like