fbpx

சோகத்தில் தென் மாவட்டம்…! திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…!

தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மிக்ஜாம் புயல் கனமழை ஏற்படுத்திய வரலாறு காணாத பேரிடரால் சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். டிச.17ம் தேதி நடைபெறவிருந்த மாநாடு சென்னை வெள்ளம் காரணமாக டிச. 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தற்போது தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பல மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உதவிகளுக்காக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் களத்தில் இறங்கி மக்களுக்கான நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது சேலம் மாவட்டத்தில் வரும் 24-ம் தேதி நடைபெற இருந்த, திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

திக்.. திக்...! அடுத்த 3 மணிநேரத்தில் 13 மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...!

Tue Dec 19 , 2023
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் […]

You May Like