fbpx

நாளை திமுக இளைஞரணி மாநாடு…! இன்று சேலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்…!

திமுக இளைஞரணி சார்பில் மாநில உரிமை மீட்பு மாநாடு சேலத்தில் நாளை நடக்க உள்ளது.

திமுக இளைஞரணி சார்பில் மாநில உரிமை மீட்பு மாநாடு சேலத்தில் நாளை நடக்க உள்ளது. இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி இன்று சேலம் பயணம் செய்ய உள்ளனர். மேலும் பிரமாண்ட டிரோன் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல முரசொலி புத்தக சாலை – இதர கண்காட்சிகளை இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

மாநாடு நோக்கம்

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மாநாடு பந்தல் அருகில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகம் 100 அடி கொடிக்கம்பத்தில் திமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைக்க உள்ளார்.

அதேபோல் இந்த மாநாட்டில் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தமிழக முழுவதும் பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்துக்களை மாநாட்டில் முதல்வரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. மேலும் இந்த மாநாட்டில் மாநில உரிமைகளை மீட்பது தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் போட வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

’என்னால் மன்னிப்பு கேட்க முடியாது’..!! ’நாளையும் அப்படித்தான் பேசுவேன்’..!! அண்ணாமலை தடாலடி..!!

Sat Jan 20 , 2024
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேற்று சென்றார். அப்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, பிரதமர் மோடி தமிழகத்தில் உள்ள ஆன்மீக தலத்திற்கு செல்கிறார். ராமர் சென்ற இடத்துக்கெல்லாம் மோடி சென்றுவிட்டு, அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்கிறார். மோடி இந்த மாதத்தில் 2-வது முறையாக தமிழ்நாடு […]

You May Like