fbpx

ஆடி அமாவாசை நாளில் இந்த மாதிரி பண்ணுங்க..!! அனைத்து நன்மைகளும் உங்களை தேடி வரும்..!!

அமாவாசை என்பது முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு உரிய நாளாகும். இந்நாளில், முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து, அவர்களுக்கு பிடித்தமான உணவை சமைத்து, அதை முன்னோர்களுக்கு கொடுப்பதாக நினைத்து காக்கைகளுக்கு கொடுத்த பிறகு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவது தான் வழக்கம். இப்படி செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆடி அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடும் முறை :

ஆடி அமாவாசை அன்று நல்ல நேரம் பார்த்து வீட்டில் இருந்து கிளம்புங்கள். பின் மளிகை கடையில், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வெல்லத்தை வாங்குங்கள். பிறகு, துணி கடைக்கு சென்று வேஷ்டி, துண்டு என ஏதாவது ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். பின்னர், வாங்கி வந்த பொருளை பூஜை அறையில் வைத்து, முன்னோர்களால் ஏற்பட்ட சாபம் நீங்கவும், அவர்களது ஆசி கிடைக்க வேண்டும் என்று வழிபாடு செய்யுங்கள். ஒருவேளை கன்னி தெய்வமாக இருந்தால், கன்னி தெய்வத்தின் அருளும் கிடைக்க வேண்டும் என்று வழிபடுங்கள். பிறகு வெல்லம் மற்றும் துணியை யாராவது ஒரு ஏழைக்கு தானமாக கொடுங்கள்.

ஆடி அமாவாசை அன்று செய்ய வேண்டியவை :

ஆடி அமாவாசை நாளில் உங்களால் முடிந்த அளவிற்கு வயதானவர்களுக்கு, ஏழைகளுக்கு, ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்குங்கள். குறைந்தபட்சம் 11 பேருக்காவது உங்கள் கைகளால் அன்னதானம் வழங்கினால், முன்னோர்களின் சாபம் நீங்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி, உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தோல்விகள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

Read More : நீங்க கார் வாங்கப் போறீங்களா..? அப்படினா இந்த விஷயங்களை செக் பண்ணுங்க..!!

English Summary

Amavasai is an auspicious day for ancestor worship.

Chella

Next Post

தூள்...! UPSC பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500 உதவித்தொகை...! இன்று முதல் விண்ணப்பம் ஆரம்பம்...!

Fri Aug 2 , 2024
Rs.7,500 monthly stipend for UPSC students

You May Like