fbpx

டீ, காபி குடிக்காதீங்க..!! எச்சரிக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!! எதனால் தெரியுமா..?

பழக்கடைகளில் ரசாயனம் பயன்படுத்துவதாக பொதுமக்களுக்கு சந்தேகம் வந்தால் புகார் அளிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”வரும் நாட்களில் கோடை வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தீவிர தலைவலி, மயக்கம், படபடப்பு, தசை பிடிப்பு வலி, சுயநினைவு இழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் வெளியில் செல்லும்போது தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும் எனவும் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

இளநீர், தர்பூசணி, கிர்ணி பழச்சாறுகள், மோர் உள்ளிட்டவற்றை பருக வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். மதுபானம், டீ , காபி, கார்போஹைட்ரேட் செய்யப்பட்ட குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் பழக்கடைகளில் ரசாயனம் பயன்படுத்துவதாக பொதுமக்களுக்கு சந்தேகம் வந்தால் உணவு பாதுகாப்பு துறையின் 9444042322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்” என தெரிவித்தார்.

Chella

Next Post

வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா..? உங்களுக்கான இஎம்ஐ அதிரடியாக குறைகிறது..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Wed Apr 12 , 2023
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வந்தது. இதனால் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை உயர்த்தின. இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் […]

You May Like