கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுவும், இந்தாண்டு வழக்கத்தை விட வெப்பநிலை அதிமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்த கோடைகாலத்தில் அதிக வெப்பம் காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
இதனால், காலை 11 மணி முதல் மதியம் 3 வரை வெளியில் அதிகம் செல்ல வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த கோடையில் உடலில் நீர் சத்து குறைதல், தோல் பிரச்சனை, ஹீட் ஸ்ட்ரோக், உயர் ரத்த அழுத்தம், களைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில இடங்களில் உயிரிழப்புகள் கூட நிகழ்ந்துள்ளது.
மேலும், தவறான உணவு பழக்கம், போதிய தண்ணீர் குடிக்காமல் இருத்தல், அதிக நேரம் சூரிய வெப்பத்தை எதிர்கொள்வதும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், அதிக வெப்ப நாட்களில் வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி அணிந்து செல்ல வேண்டும்.
கோடைகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன..?
கோடைகாலத்தில் சில உணவுகள் உடல் வெப்ப நிலையை அதிகரித்து, ஹீட் ஸ்ட்ரோக் போன்ற உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். எனவே, மிளகாய், இஞ்சி, பூண்டு போன்ற மசாலா பொருட்கள், பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய்யில் வறுத்தெடுக்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. அதேபோல் அதிக புரதம் கொண்ட இறைச்சி வகைகள் மற்றும் டீ, காபி, குளிர்பானங்கள் போன்றவை தவிர்ப்பதும் நல்லது.
கோடைகாலத்தில் எந்த உணவுகளை சாப்பிடலாம்..?
கோடை காலத்தில் வெள்ளரி, தர்பூசணி, நுங்கு, முருங்கைக் கீரை, தயிர் மற்றும் பழங்கள் ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். இவற்றை சாப்பிடுவதால், உங்கள் உடல் குளிர்ச்சியடைய செய்யும். மேலும், உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், வெப்பத்தைக் கட்டுப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
Read More : திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா..!! ஏப்ரல் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!