fbpx

உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கிறார்களா……? அப்படி என்றால் இதை உடனே செய்யுங்கள் தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு……!

எப்போதுமே மத்திய, மாநில அரசுகள் பெண் குழந்தைகள் நலனில் தனிக் கவனம் செலுத்தி வருகின்றன. அதிலும் மத்திய அரசு பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் ஏராளமான சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி அனைத்து தபால் நிலையங்களிலும் செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கி இருந்தது.

இந்த திட்டத்தின் மூலமாக ஒரு வயது முதல் உள்ள குழந்தைகள் இந்த திட்டத்தில் இணையலாம் என்று கூறப்படுகிறது. அந்த திட்டத்தில் இணைந்த பிறகு மாதம்தோறும் ஒரு தொகையை செலுத்தி வந்தால், அந்த பெண் குழந்தைக்கு 18 வயது ஆகும்போது அந்த குழந்தைக்கான முதிர்வு தொகை வழங்கப்படும். பின்னர் அந்த குழந்தையின் கல்வி குறித்த பல்வேறு செலவுக்கு அந்த முதிர்வு தொகை பயனாக இருக்கும்.

அந்த வகையில், தற்போது தமிழகத்தில் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், இந்த கல்வி ஆண்டில் கல்லூரி மாணவிகளுக்காக புதுமைப்பெண் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

அந்த திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவி தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வுத்தொகை பெறுவதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது, பெண்கள் பாதுகாப்பு திட்டத்திற்கு ஒரு குடும்பத்தில் முதலில் பெண் குழந்தை பிறந்தால் 25000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திட்டம் புதுப்பிக்கப்பட்ட பிறகு, குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்த உடன் இந்த தொகை வட்டியுடன் வழங்கப்படும். இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த முடிவு தொகையை பெறுவதற்கு பலரும் இதுவரையில் விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள்.

ஆகவே அவர்களுக்கு உதவி புரியும் விதத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகங்களிலும் மாதந்தோறும் இரண்டாம் செவ்வாய்க்கிழமைகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட இருப்பதாக தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கிறது

Next Post

உல்லாசத்திற்கு அழைத்த ஓபிஎஸ் மகன்..!! வீடியோ காலில் ஆபாசம்..!! இளம்பெண் பரபரப்பு புகார்..!!

Wed Aug 2 , 2023
சென்னை அருகே ஏகாடூர் பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி தேவி. இவர், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் மக்களவை உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத், தனக்கு கொலை மிரட்டல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறி புகார் அளிக்க வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த 2014ஆம் ஆண்டு தனது தோழியின் திருமணத்தில் ஓபிஎஸ் மகள் கவிதா, அவரது சகோதரர் ரவீந்திரநாத் மற்றும் அவரது மனைவி ஆனந்தி ஆகியோருடன் நட்பு ஏற்பட்டதாக […]

You May Like