நாட்டில் 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகிறார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..
ஆக்ராவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரும் சமூக ஆர்வலருமான டாக்டர்.தேவாஷிஷ் பட்டாச்சார்யா தாக்கல் செய்த ஆர்.டி.ஐ விண்ணப்பத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் மொழித் துறை இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகையில் 0.002 சதவீதம் பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகின்றனர். அதாவது இந்தியாவில் 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருஹம் பேசுகின்றனர்..
சமஸ்கிருதம் அரசியலமைப்பில் சிறுபான்மை மொழியாக பட்டியலிடப்படவில்லை, ஆனால் நாட்டின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக உள்ளது. 2010 ஆம் ஆண்டில், சமஸ்கிருதத்தை 2-வது அதிகாரப்பூர்வ மொழியாக உத்தரகண்ட் அரசு பட்டியலிட்டது.. இதன் மூலம் சமஸ்கிருத்தை 2-வது மொழியாக அங்கீகரித்த இந்தியாவின் முதல் மாநிலமாக உத்தரகண்ட் மாறியது.. இருப்பினும், சமஸ்கிருதம் மொழி அரிதாகவே பேசப்படுகிறது..
சமஸ்கிருதம் உட்பட பல மொழிகளின் கலவையான இந்தி, பல கோடி இந்தியர்களால் பேசப்படுகிறது. மேலும் பீகார், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் உட்பட இந்தியாவில் உள்ள மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் உருது பேசுகிறார்கள் மற்றும் புரிந்துகொள்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது..