இந்தியாவில், உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பலவிதமான பிரம்மாண்ட கட்டிடங்கள் உள்ளன.
வரலாற்று சின்னம் தாங்கிய கட்டிடங்கள் இன்றும் இருக்கின்றன. அதில் முக்கியமானது ஒன்று தான் தாஜ்மஹால். உலகமே வியந்து பார்க்கும் தாஜ்மஹால், நுணுக்கமான கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த உதாரணம். அதேபோல செங்கோட்டையையும் குறிப்பிடலாம்.
திறன் வாய்ந்த கட்டிடக்கலை நிபுணர்களுக்கு இன்று வரை தேவை குறையவே இல்லை. அதுவும், இன்றைய காலகட்டத்தில், பிரம்மாண்டமான கட்டிடங்களை கண்ணைப்பறிக்கும் டிசைனில் கட்ட, கட்டாயம் வேலை தெரிந்த கட்டிடக்கலை நிபுணர்கள் தேவை. அதும் மன்னர்கள் ஆட்சி காலத்தில் சொல்லவே தேவையில்லை. திறமைக்கும் சான்றாக வரலாற்றுச் சின்னங்கள் மிளிர்கின்றன. இதில், ஷாஜகான் ஆட்சி புரிந்த காலத்தில் தாஜ்மஹால், செங்கோட்டை மற்றும் டெல்லியில் இருக்கும் ஜம்மா மசூதியை வடிவமைத்தது உஸ்தாத் அகமத் லஹோரி என்ற கட்டிடக்கலை நிபுணர்.
இவர் தான் ஷஜாகானின் தலைமை கட்டிடக்கலை நிபுணர் ஆவார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட இவற்றை வடிவமைத்தவருக்கு ஊதியமாக எவ்வளவு தொகை வழங்கப்பட்டது தெரியுமா..? முகலாய மன்னரான ஷாஜகான் இந்தியா முழுவதுமே மிகப்பெரிய கோட்டைகளையும், கட்டிடங்களையும் கட்ட வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார். ஆக்ராவை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த ஷாஜகான், செங்கோட்டையை கட்டிய பிறகு மே 12, 1638இல் டெல்லியை தலைநகராக மாற்றினார்.
ஏற்கனவே தாஜ்மஹா,லைக் கட்டுவதில் முக்கிய பங்கு வகித்த உஸ்தாத் அகமத் லஹோரியை செங்கோட்டை கட்டுவதிலும் நியமித்தார். வரலாற்று ஆய்வாளர்களின் படி, ஷாஜகான், உஸ்தாத் அகமதுக்கு ரூ.1,000 சம்பளமாக வழங்கினார் என்று கூறப்பட்டது. என்னது 1,000 ரூபாய் தான் சம்பளமா என்று நீங்கள் கேட்கலாம். தற்போதைய பணமதிப்பின் அடிப்படையில் இன்றைய நவீன தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓக்கள் வாங்கும் சம்பளத்தை விட, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உஸ்தாத் வாங்கிய ரூ.1,000 சம்பளம் பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.