fbpx

ஊழியர்களின் டேக் ஹோம் சம்பளம் குறையுமா..? புதிய ஊதிய குறியீடு எப்போது அமலுக்கு வரும்..?

மத்திய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை இணைத்து 4 ஊதியக் குறியீடுகளை தயாரித்துள்ளது… அதாவது ஊதிய குறியீடு, தொழில்துறை உறவுகள் குறியீடு, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சமூக பாதுகாப்பு குறியீடு ஆகியவை ஆகும்.. கடந்த 2019-ம் ஆண்டில் தொழில்துறை உறவுகள், வேலையின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய மூன்று தொழிலாளர் குறியீடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த புதிய ஊதிய குறியீட்டின் படி, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் நிறுவனத்தின் செலவில் (CTC) 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது. தற்போது, ​​பல நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை குறைத்து, அதிக அலவன்ஸ்களை வழங்குவதால், நிறுவனத்தின் சுமை குறைகிறது. ஊதியக் குறியீடு சட்டம், அமல்படுத்தப்பட்டவுடன், ஊழியர்களின் சம்பள அமைப்பு முற்றிலும் மாறும். ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் பிஎஃப் அதிகரிக்கும் என்பதால் ‘டேக் ஹோம் சம்பளம்’ குறையும். பிஎஃப் உடன், கிராஜுவிட்டிக்கான பங்களிப்பும் அதிகரிக்கும். இதனால் ஊழியர்களின் டேக் ஹோம் சம்பளம் குறையக்கூடும்..

புதிய தொழிலாளர் குறியீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, நிறுவனங்கள் ஒரு வாரத்தில் மூன்று வாரம் விடுமுறை அளிக்கும் விருப்பம் உள்ளது. ஊழியர்களை வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய எந்த நிறுவனமும் அனுமதிக்கப்படாது. அதாவது ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்பவர்கள் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும். 8 மணி நேர வேலை உள்ளவர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்வார்கள்.

மேலும் புதிய ஊதியக் குறியீட்டின்படி ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு (Earned Leave) எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு துறைகள் இப்போது 1 வருடத்தில் 30 விடுமுறைகளை அனுமதிக்கின்றன, பாதுகாப்பு ஊழியர்களுக்கு ஒரு வருடத்தில் 60 விடுமுறைகள். ஊழியர்கள் 300 விடுமுறைகள் வரை பணமாகப் பெறலாம், இருப்பினும் புதிய குறியீட்டில் விடுமுறை நாட்களை 450 ஆக அதிகரிக்க தொழிலாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. எனினும் ஊழியர்கள் 20 வருட சேவைக்குப் பிறகுதான் இந்த விடுமுறைகளை பணமாக எடுத்துக்கொள்ள முடியும்.

இந்த புதிய விதிகள் ஜூலை 1 முதல் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.. ஆனால் அவை எப்போது அமல்படுத்தப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. இருப்பினும் எனவே எந்த நேரத்திலும் நடைமுறைப்படுத்தலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Maha

Next Post

மீட்புப்பணி நடைபெற்ற இடத்தில் மற்றொரு நிலச்சரிவு... உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம்...

Sat Jul 2 , 2022
மணிப்பூரின் நோனி மாவட்டம் தூபுலில் கனமழை காரணமாக, நேற்று முன்தினம் தூபுல் ரயில் நிலையம் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட ஏராளமானோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. நேற்று காலை மீண்டும் மீட்புப் பணி தொடங்கியது. இதுவரை 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 18 ராணுவ வீரர்கள், 6 […]

You May Like