fbpx

ஹனிமூன் என்று பெயர் எப்படி வந்தது தெரியுமா? பலருக்கு தெரியாத சுவாரசிய தகவல்..!!

திருமணம் முடிந்து கணவனும் மனைவியும் தனியாக நேரத்தை செலவழிப்பதற்கும் சந்தோஷமாக இருப்பதற்கும் தேனிலவு சரியானதாக இருக்கிறது. தேனிலவு செல்லக்கூடிய நாட்களை வாழ்நாளில் என்றுமே மறக்கமுடியாத அளவிற்கு இருக்க வேண்டும் என்பதால் திருமணம் முடிந்த கையோடி தேநிலவு செல்ல விரும்புகின்றனர். ஆனால், இந்த பயணம் ஏன் ஹனிமூன் என்று அழைக்கப்படுகிறது என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அந்த பயணத்திற்கும் தேனுக்கும் நிலவுக்கும் என்ன முடிச்சு என்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா?

ஹனிமூனுக்கு பல விளக்கங்கள் சொல்லப்பட்டாலும் பிரதானமாக கூறப்படும் விளக்கத்தை தான் முதலில் பார்க்க இருக்கிறோம். பண்டைய பாபிலோனில் திருமணத்திற்குப் பிறகு, மணமகனின் தந்தை மணமகனுக்குத் தேனில் புளிக்கவைத்த மதுவை ஒரு மாதத்திற்கு தருவாராம். பாபிலோனிய நாட்காட்டி என்பது நிலவை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுவது. இதனால், தேன் கலந்த மதுவை தரும் மாதத்தை தேன் – நிலவு மாதம் என்று அழைத்தனர்.

அது பின்னாளில் தேனிலவாக மாறிவிட்டது. இது பண்டைய ஹூன் அரசர் அட்டிலாவின் காலத்தில் இருந்து வரும் வழக்கம். திருமணத்திற்குப் பிறகு, புதுமணத் தம்பதிகள் ஒரு மாதத்திற்கு தினமும் தேன் கலந்த மதுவை குடிக்க வேண்டும். இந்த தேன் மதுவால் உடலியல் மாற்றங்கள் ஏற்படும். இந்த வழக்கம் புதிய உறவின் மகிழ்ச்சி மற்றும் இனிமையான தூக்கத்திற்கு வழிவகுக்கும் என்று நம்பினர்.

மற்றொரு விளக்கம், மூன் என்ற சொல் பருவங்களின் சுழற்சியைக் குறிக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இருக்கும் காலம் புதிய நெருக்கத்தை உருவாக்கும். உடலுறவு இனிமையாகத் தோன்றும். காலம் ஆக ஆக இது மாறலாம். குறையலாம். அதனால்தான், திருமணமான உடனேயே தம்பதிகள் செலவழிக்கும் அந்தரங்க நேரத்தை ‘ஹனிமூன்’ என்று குறிப்பிட்டுள்ளனர். அதேபோல பழைய ஆங்கில வார்த்தையான Hony Moone என்ற வார்த்தையில் இருந்து வந்ததாக சொல்கிறார்கள். Hony என்பது புது உறவின் இனிமையையும் Moone என்பது திருமணம் ஆனதும் ஏற்படும் உடலியல் மாற்ற காலத்தை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது.

எல்லோருக்கும் இந்த நெருக்க காலம் உடனே அமையாது. கொஞ்சம் புரிந்து அதற்கு ஏற்ப மாற காலம் எடுக்கும். அதனால் தான் ஒரு விஷயத்தை தொடங்கி குறைந்தது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரையான காலத்தை ஹனிமூன் பீரியட் அல்லது ஹனிமூன் காலம் என்று குறிப்பிடுவர். ஆனால், காரணம் என்னவாக இருந்தாலும் புதுமணத் தம்பதிகள் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்ளவும், சேர்ந்து நேரத்தைச் செலவிடவும், புதிய உறவின் அடித்தளத்தை வலுப்படுத்தவும் இது உதவும்.

Read more ; மக்களே இது தெரியுமா..? ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை இப்படி பயன்படுத்தி பாருங்க..!!

English Summary

Do you know how the name Honeymoon came about?

Next Post

பரபரப்பு..!! பள்ளியில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை..!! இரயிலை மறித்து போராட்டம்..!!

Tue Aug 20 , 2024
A train strike was held in Kharashtra to condemn the sexual harassment of 2 school girls.

You May Like