fbpx

இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்க்கும்.. எந்தெந்த இடங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. டெல்டா மாவட்டங்கள்‌, கடலூர், தேனி, திண்டுக்கல்‌, அரியலூர்‌, பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் வரும் 23-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

தெற்கு வங்கக்கடல், தமிழக கடலோர பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள்‌, குமரிக்கடல்‌ பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய வட ஆந்திர கடலோர பகுதிகள்‌, இலங்கை கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 6௦ கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்‌. எனவே இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்..“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

செப்டம்பர் முதல் நேரடி வகுப்புகள்..! நாடு திரும்பிய இந்திய மாணவர்களுக்கு உக்ரைன் அழைப்பு..!

Fri Aug 19 , 2022
உக்ரைனில் போர் எதிரொலியாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகளை தொடங்க இருப்பதால், அங்கிருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போருக்கு இடையே உக்ரைனில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் சுமார் 20,000 பேர் மத்திய அரசின் உதவியால் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். இரு நாடுகளிடையேயான போர் […]
செப்டம்பர் முதல் நேரடி வகுப்புகள்..! நாடு திரும்பிய இந்திய மாணவர்களுக்கு உக்ரைன் அழைப்பு..!

You May Like