fbpx

அலர்ட்.. இன்று முதல் கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, சேலம்‌ மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌ மற்றும்‌ நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 18-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர்‌, அரியலூர்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, திருச்சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, நாமக்கல்‌, கரூர்‌, திண்டுக்கல்‌, தேனி மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 19, 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுஇகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டவரின் மண்டையை உடைத்த துணை தலைவர்.. ஆலங்குளத்தில் பரபரப்பு..!

Tue Aug 16 , 2022
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட மாயமான் குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் குருவன்கோட்டை கிராமத்தில் உள்ளது. நேற்று அங்கு நடந்த கிராமசபை  கூட்டத்தின் போது குருவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஊராட்சி மன்ற தலைவி பால்த்தாய் மற்றும் துணை தலைவர் கண்ணன் ஆகியோரிடம் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் […]

You May Like