fbpx

ரயிலில் ஜெனரல் கம்பார்ட்மென்ட் ஏன் முதல் மற்றும் கடைசியில் இருக்கிறது தெரியுமா? காரணம் இதுதான்!

உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே நெட்வொர்க் உள்ளது. நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், பேருந்து, விமானத்தை விட ரயில் பயணத்தை மட்டுமே சொகுசாக உணர்கிறார்கள். இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ரயிலில் ஜெனரல் கோச், ஸ்லீப்பர், 3rd AC, 2nd AC, 1st AC போன்ற பெட்டிகள் உள்ளது.

பெரும்பாலும் பணக்காரர்கள் ஏசி பெட்டிகளிலும், நடுத்தர மக்கள் ஜெனரல் ஸ்லீப்பர் கோச்சிலும், ஏழைகள் ஜெனரல் பெட்டியிலும் பயணிக்கிறார்கள். இதில் ஜெனரல் கோச்சுகள் ரயிலின் முன் மற்றும் பின் பக்கத்தில் இருக்கும். சில சமயங்களில் பலருக்கும் வேகமாக ஓடிப்போய் கடைசி பெட்டியான ஜெனரல் கோச்சில் ஏறிய அனுபவமம் இருக்கும்.

ஏன் ஜெனரல் கோச் ரயிலின் கடைசி அல்லது முன் பக்கத்தில் உள்ளது… ஏன் ரயிலின் மையத்தில் இல்லை?” என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? ஒரு சில காரணங்களால் தான் ரயில்வே பொதுப் பெட்டிகளை ரயிலின் பின்புறத்தில் அல்லது முன்புறத்தல் வைத்துள்ளது. அதற்கான காரணங்களை இப்போது பார்ப்போம்.

ஒவ்வொரு ரயிலின் அமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருக்கும். அதாவது, எஞ்சினைத் தொடர்ந்து AC-3, AC-2, ஸ்லீப்பர் கோச்சுகள் மற்றும் ரயிலின் பின்பக்கத்தை நோக்கி அதாவது இறுதியாக பொதுப் பெட்டி (ஜெனரல்) என பொருத்தப்பட்டிருக்கும். ஜெனரல் பெட்டிகள் எப்போதும் ரயிலுக்கு முன்னால் அல்லது பின்னால் இணைக்கப்பட்டிருப்பது பயணிகளின் உயிருடன் விளையாடுவது போன்றது என ரயில்வே மீது மக்கள் குற்றம் சாட்டினர்.

ஆனால், இந்த குற்றசாட்டை ரயில்வே முற்றிலும் மறுத்துள்ளது. அத்துடன், பொதுப் பெட்டிகள் ஏன் ரயில்களின் முடிவில் அல்லது தொடக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான உண்மையான காரணத்தையும் கூறியுள்ளது. இந்தியன் ரயில்வே தகவலின்படி, ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளை விட ரயிலின் ஜெனரல் கோச்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். பொதுப் பெட்டிகளில் ஒவ்வொரு நிலையத்திலும் அதிகமான பயணிகள் ஏறி, இறங்குவார்கள். எனவே, கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில், ரயிலின் நடுப்பகுதியில் ஜெனரல் கோச்சுகளை சேர்த்தால், ரயிலின் நடுப்பகுதியில் அதிக எடை ஏற்பட்டு, ரயில் சமநிலையில் இருக்காது. போர்டிங்-டிபோர்டிங்கிலும் சிக்கல் ஏற்படும். ஜெனரல் கம்பார்ட்மென்ட் நடுவில் இருந்தால், அது இருக்கை அமைப்போடு மற்ற ஏற்பாடுகளையும் பாதிக்கும். ரயிலின் முன் மற்றும் பின்புறம் பொது பெட்டிகளை வைப்பதன் மூலம், பயணிகள் கூட்டம் சமமாக பிரிக்கப்படுகிறது. திரும்பும் பயணத்தில் இருபுறமும் என்ஜினைச் சேர்ப்பது ரயிலின் சமநிலையை பராமரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

ரயில்வே நிபுணர்களின் கூற்றுப்படி, ரயிலின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ பொதுப் பெட்டிகளைச் சேர்ப்பது பயணிகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை நன்மை பயக்கும். அதுமட்டும் அல்ல, விபத்து, தடம் புரண்டது அல்லது தீ விபத்து போன்ற அவசர காலங்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கொண்ட இந்த பெட்டிகளில் இருந்து மக்களை விரைவாக வெளியேற்ற முடியும்.

Read more ; “அரசு ஊழியர் லஞ்சம் வாங்கினால் மனைவிக்கும் தண்டணை” – உயர் நீதிமன்றம் அதிரடி!

English Summary

English summary

Next Post

Summer Tips : கோடையில் மண்பானை தண்ணீர் ஏன் குடிக்கனும் தெரியுமா..?

Sun Jun 2 , 2024
English summary

You May Like