fbpx

உயரமான தலையணை வைத்து தூங்குறீங்களா..? இதனால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

நாம் அனைவரும் உறங்குவதற்கு பொதுவாக மெத்தை மற்றும் தலையணைகளை பயன்படுத்துகிறோம். இன்று தலையணை பயன்படுத்தாமல் உறங்குபவர்களே இல்லை என்று கூறலாம். எனினும் நம் தலைக்கு வைக்க பயன்படுத்தும் தலையணையின் உயரம் அதிகமாக இருக்கும் போது அது உடலுக்கு பல்வேறு வகையான அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது. அவை என்ன என்று இந்த பதிவில் காணலாம்.

உயரமான தலையணையை பயன்படுத்தி உறங்குவது கழுத்து எலும்பு தேய்விற்கு முக்கிய காரணமாக அமைகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தலைக்கு உயரமான தலையணையை வைக்கும் போது கழுத்திலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதன் காரணமாக காலையில் எழும்போது அவர்களுக்கு கழுத்து வலி மற்றும் கழுத்து திருப்ப முடியாத பிரச்சனை ஆகியவை ஏற்படுகின்றன. இது நாளடைவில் கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு வழிவகிக்கிறது. மேலும் உயரமான தலையணையை உறங்க பயன்படுத்துவதன் மூலம் முதுகு தண்டு ஓட்டத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக நேராக வைத்து உறங்குவதே சிறந்தது. ஆனால் தலையணையின் உயரம் அதிகம் இருப்பதால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்படுகிறது .

இவை தவிர தோளில் ஏற்படும் அரிப்பு சருமத்தில் ஏற்படும் எரிச்சல் தங்களுக்கு அடியில் பை போன்று வீங்கி இருத்தல் மற்றும் உதடுகளில் ஏற்படும் வெடிப்பு ஆகியவற்றிற்கும் உயரமான தலையணை வைத்து உறங்குவது காரணமாக அமைகிறது. உயரமான தலையணையை பயன்படுத்தும் போது அவற்றால் கழித்து மற்றும் மூளைக்கு இடையேயான ரத்த ஓட்டத்தின் வேகம் குறைகிறது. இதன் காரணமாக முகத்தில் ஏற்படும் அதிகமான அழுத்தம் மற்றும் பாக்டீரியா தொற்றின் காரணமாக இது போன்ற பிரச்சனைகள் உருவாகின்றது. எனவே சிறிய அளவிலான சமமான தலையணையை பயன்படுத்தி உறங்குங்கள்.

Read More : 425 மருந்தாளுநர் காலிப் பணியிடங்கள்..!! மாதம் ரூ.1,30,400 வரை சம்பளம்..!! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!! தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு..!!

English Summary

When the height of the pillow we use to place our head is too high, it causes various types of discomfort to the body.

Chella

Next Post

இந்த இரண்டு உணவுப் பொருட்களையும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டால் விஷமாகுமா..? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது..?

Tue Feb 18 , 2025
Do not eat sweets or alcoholic beverages like wine after eating honey.

You May Like