மக்கள் வெளியே பயணத்தை மேற்கொள்ளும் போது பொது-கழிவறையை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் சிறுநீர் தொற்று ஏற்படக்கூடும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சில வழிகள் இங்கே காணலாம்.
சில சமயங்களில் பொதுக் கழிவறைகளில் தண்ணீர் கூட இல்லாமல் இருக்கும். மேலும் சில மாதங்களில் சுத்தமும் செய்யப்படுவதில்லை. இந்த நிலையில், நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது.
டிஷ்யூ பேப்பரை எடுத்து கொண்டு, உங்கள் விரலை முழுமையாக அதனால் போர்த்திய பின்னர் ஃப்ளஷ் பட்டனை அழுத்தவும். மேலும் இவ்வாறு ஒவ்வொரு முறையும் கழிப்பறையைப் பயன்படுத்தும் போதும் உங்கள் கைகளை சுத்தப்படுத்த மறக்க வேண்டாம்.
பொது கழிவறைத் தளங்கள் மிகவும் அழுக்காகவே இருக்கும். எனவே, பைகளை தரையில் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. பைகளில் இருந்து இறுதியில் உங்கள் கைகளிலும் எளிதாகப் பரவும். அதனால் அதனை தவிர்த்து விடுவது நல்லது.