fbpx

1 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா..? ரயில்வே விளக்கம்..

1 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று வெளியான தகவல் தவறானது என்று ரயில்வே விளக்கமளித்துள்ளது..

ரயிலில் 1 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று ரயில்வே உத்தரவிட்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.. இதற்காக டிக்கெட் விதிமுறைகளை ரயில்வே மாற்றி அமைத்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் இதுகுறித்து ரயில்வே விளக்கமளித்துள்ளது.. 1 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றும் ரயில்வே விளக்கமளித்துள்ளது..

எனினும் பயணிகள் விரும்பினால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கி அவர்களுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தேவையில்லை எனில், அந்த குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது..

Maha

Next Post

வீடியோ வெளியிட்டு 16 வயது சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை.. காதலி இறந்ததால் நடந்த சோகம்..!

Thu Aug 18 , 2022
சங்கரன்கோவில் அருகே 16 வயது சிறுவன் காதலி இறந்த துக்கத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். மேலும் காதலியை எரித்த அதே இடத்தில் அவனையும் எரித்து விட சொல்லி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் பெற்றோர், அவனது உடலை காவல்துறையினருக்கு தெரியாமல் எரிக்க முயன்றுள்ளனர். இது தெரிந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

You May Like