fbpx

மக்களே..! ரேஷன் கார்டில் பெயர் திருத்த வேண்டுமா…? வரும் 8-ம் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிப்பு…!

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ வருகின்ற 08.07.2023 அன்று பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்கள்‌ பயன்‌ பெறும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும்‌ பொது விநியோகத்திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை 2023 மாதம்‌ இரண்டாவது சனிக்கிழமை 08.07.2023 அன்று ஒவ்வொரு வட்டாட்சியர்‌ அலுவலகத்திலும்‌ நடைபெறும்‌ பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ முகாமில்‌ பொதுமக்கள்‌ பொது விநியோகத்திட்டம்‌ தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல்‌ அலுவலரிடம்‌ நேரில்‌ தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்‌ என கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

இக்குறைதீர்‌ முகாமில்‌, குடும்ப அட்டைகளில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, பெயர்‌ நீக்கம்‌, முகவரிமாற்றம்‌ மற்றும்‌ புதிய குடும்ப அட்டை / நகல்‌ அட்டை கோரும்‌ மனுக்கள்‌ பெற்று உடனடிநடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. மேலும்‌, கைபேசி எண்‌ பதிவு மற்றும்‌ கைப்பேசி எண்‌ மாற்றம்‌ செய்தலுக்கான மனு பெற்று உடன்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. பொது விநியோக கடைகளின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ அத்தியாவசியப்‌ பொருட்களின்‌ தரம்‌ குறித்த புகார்கள்‌ இருப்பின்‌ அதன்பேரில்‌ உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

தனியார்‌ சந்தையில்‌ விற்கப்படும்‌ பொருட்கள்‌ மற்றும்‌ சேவைகள்‌ தொடர்பான குறைபாடுகள்‌ குறித்த புகார்கள்‌ இருப்பின்‌ அவற்றை நுகர்வோர்‌ பாதுகாப்புச்‌ சட்டம்‌, 2019 இன்‌ கீழ்‌ உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை அளித்து பயனடையலாம்‌.

Vignesh

Next Post

ரசிகர்களுக்கு ஷாக்..! தியேட்டரில்‌ 150 ரூபாய்‌ டிக்கெட்டை 250 ரூபாய்‌ ஆக உயர்த்த வாய்ப்பு...!

Wed Jul 5 , 2023
திரையரங்கின்‌ கட்டணங்கள்‌ உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மல்டி பிளக்ஸ்‌ திரையரங்குகள்‌ சங்கத்தின்‌ பொதுச்‌ செயலாளர்‌ பன்னீர்செல்வம்‌, ஸ்ரீதர்‌ கொடுத்த மனுவில்; மல்டி பிளக்ஸ்‌ ஏசி தியேட்டரில்‌ 150 ரூபாய்‌ டிக்கெட்டை 250 ரூபாய்‌ ஆக உயர்த்த வேண்டும்‌ என்றும்‌ மல்டி பிளக்ஸ்‌ ஏசி இல்லாத தியேட்டரில்‌ குறைந்தபட்ச கட்டணத்தை 150 ரூபாய்‌ ஆக உயர்த்த வேண்டும்‌ என்றும்‌, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில்‌ ஏசி இல்லாததியேட்டர்களில்‌ கட்டணத்தை 80 ரூபாயில்‌இருந்து 120 […]

You May Like