fbpx

கண் திருஷ்டி போகணுமா? அப்போ நவதானிய ஆரத்தி முறையை ஃபாலோ பண்ணுங்க..!

சிலருடைய பார்வை தீய சக்தியை ஏற்படுத்தும். அந்த வகையில் ஒருவரின் முன்னேற்றத்தைக் கண்டு மற்றவர்கள் பொறாமை கொள்வதே கண் திருஷ்டியாக கருதப்படுகிறது.

கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும், எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு. கண் திருஷ்டியை போக்க வீடுகளில் சிலர் திருஷ்டி பொம்மைகளையும், பூசணிக்காயையும் பயன்படுத்துவார்கள். ஆனால், நம் முன்னோர்கள் கண் திருஷ்டியை போக்க நவதானிய ஆரத்தி முறையை கடைபிடித்து வந்துள்ளனர். அது இந்த நவீன காலத்திலும் பின்பற்றப்படுகிறது. கண் திருஷ்டி என்ற பெயரை கேட்டாலே எப்பேர்ப்பட்ட மனிதனும் நடுங்கி போவான்.காரணம் ஒருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றும் சக்தி கண் திருஷ்டிக்கு உண்டு என்று சொல்வார்கள். எதிலும் போட்டி பொறாமை ஏற்படுவதால் அவை கண் திருஷ்டியாக மாறி விடுகிறது. இதனால் கோடீஸ்வரன் கூட தெருக்கோடிக்கு வந்துவிடுவார்கள் என்று சொல்வார்கள். இந்த கண் திருஷ்டி பாதிப்பில் இருந்து தப்பிக்க நவதானியத்தில் ஆரத்தி எடுக்க வேண்டும். அதாவது ஒரு அகலமான தட்டில் நவதானியம் ஒரு கப் அளவு கொட்டிக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு துண்டு பச்சைக் கற்பூரம்,சிறிது குங்குமம் சேர்த்து கலந்து விடவும். பிறகு ஒரு வெற்றிலையை கிள்ளி போட்டுக் கொள்ளவும்.அதன் பின்னர் 1/4 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நவ தானியத்தை கலந்து விட்டால் நவதானிய ஆரத்தி ரெடி ஆகிவிடும்.

இந்த நவதானிய ஆரத்தி மேல் ஒரு வெற்றிலை வைக்கவும்.பிறகு அதன்மேல் இரண்டு கற்பூரம் வைத்து பற்ற வைக்கவும். வீட்டில் உள்ள அனைவரையும் நிற்க வைத்து இடமிருந்து வலம் மற்றும் வலமிருந்து இடம் என்று 8 முறை ஆரத்தி சுற்றி தெருவோரத்தில் நவதானிய ஆரத்தியை கொட்டி விடவும்.இவ்வாறு மாதம் ஒருமுறை செய்து வந்தால் கண் திருஷ்டி முழுமையாக ஒழியும்.

Read More: வாக்களித்துவிட்டு வந்ததும் பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட நடிகர் விஜய்..!!

Baskar

Next Post

’தேர்தலுக்கு பிறகு எங்களில் ஒருவர் திருந்த வாய்ப்பு’..!! எடப்பாடியை அட்டாக் செய்த சசிகலா..!!

Fri Apr 19 , 2024
தேர்தலுக்கு பிறகு நிச்சயம் ஒரு மாற்றம் நடக்கும் என சசிகலா பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் எனக் கூறி வரும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தலில் தனது ஜனநாயக கடைமையாற்றியுள்ளதாகவும், மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு எங்களில் ஒருவர் திருந்துவதற்கான […]

You May Like