fbpx

உஷார்…! HMPV வைரஸ் உறுதியான 60 வயது பெண் உயிரிழப்பு…! வைரஸின் முக்கிய அறிகுறிகள் இது தான்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள பல்ராம்பூர் மருத்துவமனையில், ஹியூமன் மெட்டாப் நியூமோ வைரஸ் (எச்எம்பிவி) தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 60 வயது பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

லக்னோவைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு ஜனவரி 9-ம் தேதி தனியார் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது எச்எம்பிவி வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது, ஆனால், ஜனவரி 10 ஆம் தேதி KGMU என அழைக்கப்படும் லக்னோவில் உள்ள மன்னர் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

எச்எம்பிவி வைரஸின் ஆரம்பகால அறிகுறிகள்

எச்எம்பிவி வைரஸின் ஆரம்பகால அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் சளி ஆகும். மேலும் தொடர்ந்து இருமல், தும்மல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் இருந்து கொண்டே இருக்கும். கோவிட் போலவே ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டுள்ளது. எச்எம்பிவி வைரஸால் இளம் குழந்தைகள், வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எச்எம்பிவி வைரஸ் தொற்று ஏற்பட்டால் ஒரு சிலருக்கு உடனே கடுமையான நோய் பாதிப்பு ஏற்படலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தும்.

வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த நம்ம சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். இருமல் அல்லது தும்மல் இருந்தால் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். தொடர் இருமல் இருந்தால் பொதுவெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை மாஸ்க் பயன்படுத்துவது நல்லது. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கையை சோப்பு அல்லது சானிடைசர் போட்டு கழுவ வேண்டும்.

English Summary

Doctors said a 60-year-old woman suspected of being infected with HMBV has died.

Vignesh

Next Post

அதிர்ச்சி!!! 14 வயது மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பி; சொந்த பெற்றோர் செய்த அசிங்கமான செயல்..

Thu Jan 16 , 2025
parents sent her daughter for prostitution and selled the video for money

You May Like