fbpx

வெள்ளத்தில் இழந்த ஆவணங்கள்!… நெல்லை மாவட்டத்தில் நாளை சிறப்பு முகாம்!

நெல்லையில் டிசம்பர் 30ஆம் தேதி (சனிக்கிழமை) 8 வட்டாட்சியர் அலுவலகங்களில் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்கள் நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று சான்றிதழ் நகல்களைப் பெற்றுக்கொள்ளலாம். பிறப்பு, இறப்பு சான்று, ஜாதி சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றின் நகல்களைப் பெற ஏதுவாக இந்தச் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கல்விச் சான்றிதழ் நகல்களைக் கட்டணமில்லாமல் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு வழிவகை செய்முள்ளது. தமிழக அரசின் www.mycertificates.in என்ற அதிகாரபூர்வ இணையத்தில் பதிவு செய்து, பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களின் நகலைப் பெற்றுகொள்ளலாம். சனிக்கிழமை நடைபெற இருக்கும் சிறப்பு முகாம் மற்றும் சான்றிதழ் நகல் பெறுவது தொடர்பான சந்தேகங்களுக்கு 1077 என்ற எண்ணில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கண்காணிப்பு அறையை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

கேப்டனுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மதியம் 12 மணி வரை கடைகள் மூடல்...!

Fri Dec 29 , 2023
விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மதியம் 12 மணி வரை கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக நேற்று காலமானார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், தேமுதிக கட்சியினர், பொதுமக்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு […]

You May Like