fbpx

எப்படி சுத்தம் செய்தாலும் சமையலறையில் துர்நாற்றம் வீசுகிறதா..? அப்படினா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

என்ன தான் கிச்சனை நாம் சுத்தமாக வைத்திருந்தாலும் சில சமயங்களில் நம்மை அறியாமல் துர்நாற்றம் வீசத்துவங்கும். எங்கிருந்து அந்த துர்நாற்றம் வருகிறது என்பதை நம்மால் கண்டறியவே முடியாது. அது நம்மை மட்டும் அல்ல வீட்டில் உள்ளவர்களையும் சிரமப்பட வைக்கும். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான எளிமை முறைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கிச்சன் நறுமணம் :

ஒரு பேப்பர் அல்லது துணியில் கற்பூரத்தை வைத்து மடித்து அதை கிச்சனின் வெவ்வேறு மூலைகளில் வைய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் கிச்சனில் வீசும் துர்நாற்றத்தை விரட்ட முடியும். குறிப்பாக, 10 நாட்களுக்கு ஒரு முறை கற்பூரத்தை மாற்ற வேண்டும்.

எசன்ஷியல் ஆயில் :

கிச்சனில் துர்நாற்றம் வீசுவதாக உணர்ந்தால், முதலில் கிச்சனை சுத்தமாக துடைக்க வேண்டும். பின்னர், ஒரு பஞ்சில் எடுத்து, அதை எசன்ஷியல் ஆயிலில் நனைத்து கிச்சன் மூலைகளில் வைக்க வேண்டும். இப்படி செய்வதாலும் துர்நாற்றத்தை தடுக்க முடியும். ஆனால், 2 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சை மாற்ற வேண்டும்.

பேக்கிங் சோடா :

1 முதல் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு லிட்டர் தண்ணீரில் நன்கு கலந்து, அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கிச்சன் முழுவதும் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கிச்சனில் வீசும் துர்நாற்றத்தை இயற்கையாக தடுக்கலாம்.

பூக்கள் :

உங்க வீட்டு கிச்சன் எப்பொழுதும் வாசனையாக இருக்க, கிச்சனில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் வாசனை நிறைந்த பூக்களை நிரப்பி வைக்க வேண்டும். பூக்களில் இருந்து வரும் வாசனை கிச்சனை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். மல்லிகை, குண்டு மல்லி, ரோஜா மற்றும் சம்பங்கி பூக்களை பயன்படுத்தலாம்.

எலுமிச்சை தோல் :

நாம் தூக்கி எரியும் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத் தோல்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் இலவங்கப்பட்டை தூளை அதில் சேர்க்கவும். நீர் ஆறியதும் அதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அந்த கிச்சன் முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கிச்சன் நறுமணத்துடன் இருக்கும்.

எலுமிச்சை பழம் :

சில சமயங்களில் கிச்சன் மேடை அல்லது காய்கறி வெட்டும் பலகையில் இருந்தும் துர்நாற்றம் வீசும். இதை தவிர்க்க, எலுமிச்சையில் உப்பை தடவி அதை கிச்சன் முழுவதும் தேய்க்க வேண்டும். இதனால், கிச்சனில் வரும் துர்நாற்றம் நீங்கும். வெள்ளை வினிகரையும் தண்ணீரில் கலந்து கிச்சன் முழுவதும் தெளிக்கலாம்.

Chella

Next Post

மழை பெய்ய தயாரான வானம்..!! திடீரென தோன்றிய வெள்ளை நிற வட்டம்..!! வியந்து பார்த்த மக்கள்..!!

Thu May 4 , 2023
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாலை முதல் இரவு வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 10.30 மணிக்கு மேற்கு பகுதியில் திடீரென்று வானில் வெள்ளை நிற மிகப் பெரிய வட்டம் தோன்றியதால், அதன் அருகில் இருந்த நிலா கூட சிறியதாக தெரிந்தது. இதனை பொதுமக்கள் அச்சம் கலந்த அதிசயமாக பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்வு ஏன் தோன்றியது? எதற்காக தோன்றியது? என்று பொதுமக்களுக்கு குழப்பம் எழுந்துள்ளது. மேலும், இதுகுறித்து வானிலை […]

You May Like