fbpx

’வயாகரா’ மாத்திரை இந்த கொடிய பாதிப்பையும் சரி செய்கிறதா..? அதிர்ச்சியூட்டும் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு..!!

இந்தக் காலத்தில் அல்சைமர் நோய் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. பொதுவாக வயதானோருக்கு அதிகம் ஏற்படும் இந்த நோய் மிகவும் மோசமான நோய்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. நாம் யார்.. நம்மை சுற்றி இருக்கும் குடும்பத்தினரே யார் என்று தெரியாமல் போவது.. நாம் இத்தனை காலம் வாழ்ந்த வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்குவது போல அமைந்துவிடுகிறது.

இதற்கிடையே, அல்சைமர் நோயை எதிர்த்துப் போராடக்கூடிய மருந்துகளைக் கண்டறிய 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது தொடர்பே இல்லாத ஒரு மருந்து அல்சைமரை எதிர்த்துப் போராட வாய்ப்பு உள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் பாலியல் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் வயாகரா மாத்திரை. இந்த ஆய்வு முடிவுகள் இறுதியானது இல்லை என்றாலும், வயாகரா குறித்த இந்த ஆய்வு முடிவு முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.

வயாகராவை எடுத்துக் கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில், வயாகராவை எடுத்துக் கொண்ட ஆண்களுக்கு அல்சைமர் பாதிப்பு ஏற்படுவது 18% வரை குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவர் எந்தளவுக்கு அதிகமாக வயாகரா எடுத்துக் கொள்கிறாரோ அந்தளவுக்கு அதன் விளைவும் வலிமையானதாக இருந்துள்ளது. 21 முதல் 50 முறை இந்த வயாகரா மாத்திரைகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு அல்சைமர் ஆபத்து 44% குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

இந்த கண்டுபிடிப்புகள் ஆச்சரியமாக இருந்தாலும், வயாகரா மாத்திரைகளால் அல்சைமர் நோயில் இருந்து ஆண்களைப் பாதுகாக்க முடியும் என்பதை ஆய்வாளர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், “அல்சைமர் குறைந்ததற்கு இந்த மருந்துகள் தான் காரணம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த முடிவுகளை வைத்து அடுத்தக்கட்ட சோதனையை நடத்த உள்ளோம். அடுத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அல்சைமர் ஏற்படுவதை இந்த மாத்திரைகள் எந்தளவுக்குக் குறைக்கிறது என்பதை ஆய்வு செய்கிறோம்” என்றார்.

இந்த ஆய்வில் பாலியல் பிரச்சனைகளை சந்தித்த 2.60 லட்சம் ஆண்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் யாருக்கும் நினைவாற்றல் இழப்புக்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் வயாகரா உள்ளிட்ட மாத்திரைகளை எடுத்துக் கொண்டனர். இந்த மருந்து மூளையில் இருக்கும் புரதங்களை அகற்றுவதால் அது அல்சைமர் பாதிப்பை மெதுவாக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். முதலில், வயாகரா மாத்திரைகள் ஆஞ்சினா மற்றும் உயர் ரத்த அழுத்தச் சிகிச்சைக்காக தான் உருவாக்கப்பட்டது. ஆனால், அதை எடுத்துக் கொண்ட நபர்கள் பலருக்கும் இரவு நேரங்களில் எதிர்பாராத பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகே இது பாலியல் பிரச்சனைகளைக் குணப்படுத்தும் நோயாக மாறியது. இன்று வயாகரா மட்டும் கோடிகளில் புரளும் ஒரு பிஸ்னஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல கட்சி பிரமுகரின் மகன்..!! பாய்ந்தது வழக்கு..!!

Thu Feb 8 , 2024
17 வயது சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சிப் பிரமுகரின் மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் பகதூர்புராவைச் சேர்ந்தவர் மிர் இனாயத் அலி பக்ரி. இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிஆர்எஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். இவரது மகன் ரிஸ்வான் பக்கிரி (22). இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாகச் சொல்லியும் திருமண ஆசை காட்டியும் பாலியல் […]

You May Like