fbpx

#விருதுநகர்: தாயின் இறப்பால் வாடிய 3 ஆட்டுக் குட்டிகளுக்கு பால் அளித்த நாய்..!

சில நாட்களாக ஐந்தறிவு கொண்ட ஜீவன்கள் தனது தாயுள்ளத்தையும் மன நேயமிக்க செயலையும் செய்து வருகிறதை அறிந்து வருகிறோம். அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள அருப்புக்கோட்டை அருகே இருக்கும் திருமலைபுரத்தில் விவசாயி ராமர் என்பவர் ஆடு, மாடு மற்றும் நாய்களை வளர்த்து வருகின்றார். 

இந்த நிலையில் தான் வளர்த்த தாய் ஆடானது 3 குட்டிகள் போட்டு விட்டு உடல் நல குறைவால் இறந்து விட்டது. தாய் ஆட்டினை இழந்த ஆட்டுக் குட்டிகள் பால் இல்லாமல் பசியால் பெரும் துன்பத்தில் இருந்து வந்துள்ளது. 

பசியில் பரிதாபமாக சுற்றி திரிந்த அதனுடைய ஆட்டுக் குட்டிகளுக்கு அவர் வளர்த்த நாயானது பால் அளித்து வருகிறது. நாயானது ஆட்டுக் குட்டிகளை அரவணைக்கும் இந்த செயலானது பெரிதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Rupa

Next Post

#சென்னை :6 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐஸ் கிரீம் கடை காரர்..!

Thu Dec 1 , 2022
திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பாரதி என்பவர் சமீபத்தில் சென்னையில் நடந்த பொருட்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ் கிரீம் கடைநடத்தி வந்துள்ளார். அதே நேரத்தில் அங்கு பிறந்து ஆறு மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு பாரதி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.  இதனை தொடர்ந்து அப்பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், பெற்றோர்கள் சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  […]

You May Like