கோடைக்காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் உணவு வகைகள் எவை என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரே வழி நாம் சரியான உணவு முறைகளை பயன்படுத்த வேண்டும். உடம்பை குளிர்ச்சியாக வைக்கும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள் மற்றும் ஜூஸ்களை எடுத்து வரலாம். சில வகை உணவுகள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை உயர்த்தக் கூடிய உணவுகள் எவை என அறிவோம். ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்றான கீரைகள், குளிர்காலத்தில் சாப்பிடத் தான் ஏற்றது. ஏனெனில் கீரைகள் நம் உடல் வெப்பநிலையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கோடை காலத்தில் இவற்றை எடுக்கும் போது உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது.
வேர்க்கடலை வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே வேர்க்கடலை கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல. இது உங்களை மேலும் வெப்பமாக உணர வைக்கும்.கோடை கால பழம் என்றால் அது மாம்பழம் தான். ஆனால் மாம்பழமும் நம் உடல் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கிறது. எனவே கோடை காலத்தில் மாம்பழங்களை அதிகமாக சாப்பிடுவது உங்களுக்கு முகப்பருக்களை உண்டாக்கும்.
கோடை காலத்தில் மக்கள் குளிர்ச்சியை தரும் என நினைத்து குடிக்கும் பானம் இளநீர் தான். ஆனால் இந்த இளநீர் உங்க உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா. ஆமாங்க இளநீர் நம் உடல் வெப்பநிலையை அதிகரிக்க கூடிய பானமாகும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் கேரட், கோடைக்காலத்தில் உடம்பை சூடாக்கும். இஞ்சி சளியை போக்க சிறந்த மருந்தாகும். இது வியர்வை அல்லது சளி போன்ற உடல் சுரப்புகளின் மூலம் திரவ இழப்பை தூண்டுவதன் மூலம் உங்கள் உடலை உள்ளே இருந்து உலர்த்துகிறது. எனவே இதை கோடை காலத்தில் பயன்படுத்தும் போது உங்க உடம்பை மேலும் வறட்சியாக்கும். முட்டையில் அதிகளவு புரதம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்து உள்ளது. இது உடலை வெப்பமாக மாற்ற வாய்ப்பு உள்ளது.
கோடை காலத்தில் அதிகளவு பாதாம் பருப்பு எடுத்துக் கொண்டால் உடம்பு சூடாக வாய்ப்பு உள்ளது. எனவே பாதாம் பருப்பை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பாதாம் பருப்பை ஒரே இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிடுவது நல்ல யோசனையாக இருக்கும். அதே மாதிரி மக்கள் உடல் எடையை குறைக்க பயன்படுத்தும் ஓட்ஸ் நம் உடலை சூடாக்குகிறது. எனவே ஓட்ஸ் கோடை காலத்திற்கு சிறந்த உணவல்ல.பேரிச்சம் பழம் ஊட்டச்சத்துக்களால் நிரம்பி உள்ள பழமாகும். இருப்பினும் இது உடம்பு சூட்டை அதிகரிப்பதால் கோடை காலத்தில் இதை தவிர்க்கப்பட வேண்டும்.