நம் உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருட்களில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது.. பாலில் கால்சியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி ஆகிய பண்புகள் நிறைந்துள்ளன.. எனவே பால் உட்கொள்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.. ஆனால் பால் உட்கொள்ளும் போது பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். நாம் தவறான கலவையில் பாலை குடித்தால் அது நம் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அந்த வகையில், பாலுடன் சேர்த்து உட்கொள்ளக் கூடாத உணவுகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்…
புளிப்புப் பொருட்கள் : சிட்ரிக் அமிலம் கொண்ட சிட்ரஸ் பழங்களை பால் குடிப்பதற்கு முன் அல்லது பின் உட்கொள்ளக்கூடாது. இப்படிச் செய்வதன் மூலம், உடல் நலம் தொடர்பான பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம், இதில் வயிற்று வலி, தோல் பிரச்சனைகள் முதன்மையானவை.
மீன் நுகர்வு : தவறுதலாக கூட மீன் சாப்பிடும் முன் அல்லது பின் பால் குடிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். பால் குடிக்கும் முன்பு அல்லது பின்பு மீன் சாப்பிடுவதால், வயிற்றின் செரிமான செயல்முறை கெட்டுப்போய், பல வகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பால் குடிப்பதற்கும் மீன் சாப்பிடுவதற்கும் இடையே 2 மணிநேர இடைவெளி மிகவும் முக்கியமானது.
பருப்பு வகைகள் : பாலுடன் பருப்பு வகைகளை, சேர்த்து சாப்பிட்டால் உங்கள் வயிறு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே கட்டாயம் பாலுடன் பருப்பு வகைகளை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க முடியும்..
தயிர் : பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியெல்லாம் இல்லை. எனவே தயிரையும் பாலையும் ஒன்றாக உட்கொள்ளக் கூடாது.
எள் மற்றும் உப்பு : எள் மற்றும் உப்பு பல வகையான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அவற்றை பாலுடன் சாப்பிடவே கூடாது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.