fbpx

இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க!!! அக்டோபர் 15க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% சலுகை சென்னை மாநகராட்சி…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் நபர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும். முதல் அரையாண்டில் செப்டம்பர் வரையிலும் அடுத்த அரையாண்டு ஏப்ரல் வரையிலும் செலுத்தலாம்.

2021 -22 நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் மொத்தமாகவே ரூ.1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டுமே ரூ.945 கோடி வரி வசூலாகியுள்ளது. மாநகராட்சியின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை https://chennaicorporation.gov.in/gcc/online-payment/property-tax/property-tax-online-payment/ என்ற இணையதளம் வழியாகவும், நம்ம சென்னை செயலி, கியூஆர் கோடு ஸ்கேன் செய்தும், இ சேவை மையங்களிலும், வரி வசூலிப்பவர்களிடம் நேரடியாகவும் செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி பொதுமக்கள் சொத்துவரி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபர் 15-ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், 2022-23ஆம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியில் உயர்த்தப்பட்ட தொகையை இதுவரை செலுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும் 2 சதவீத அபராதத் தொகையையும் தள்ளுபடி செய்வதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Kathir

Next Post

விரைவில் திருமணம்!!! பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட பதிவு...

Wed Oct 5 , 2022
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் ஹரிஷ் கல்யாண், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதுக்கு முன் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் அவர் 2010-ல் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் தான் நடிகை அமலா பாலும் அறிமுகமானார். பிறகு வில் அம்பு போன்ற படங்களில் நடித்தும் பெரிதாக பேசப்படவில்லை. 2017ல் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வந்தவுடன் யுவன் கூட்டணியில் “பியார் பிரேமா காதல்” படம் மூலம் அனைவராலும் […]

You May Like