fbpx

அக்பர், SITA பெயர்களை மாற்ற மாநில அரசுக்கு உத்தரவு.! “வன விலங்குகளுக்கு மத பெயர்கள் வேண்டாம்” – கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவுரை.!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு திரிபுரா மாநிலத்தின் செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து 7 வயது உள்ள ஆண் சிங்கமும் 6 வயது உள்ள பெண் சிங்கம் கொண்டுவரப்பட்டது. இதில் ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் பெண் சிங்கத்திற்கு சீதா(SITA) என்றும் பெயரிட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்திற்கு கொண்டுவரப்பட்ட 2 சிங்கங்களும் ஒரே கூண்டில் அடைத்து வைக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்து பரிசத் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அக்பர் என்ற பெயருடைய சிங்கத்துடன் சீதா(SITA) என்ற பெயருடைய சிங்கத்தை அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனைத் தொடர்ந்து இந்து பரிசத் அமைப்பு சார்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில் சிங்கங்களுக்கு இது போன்ற பெயர்களை வழங்கிய இந்து மதத்தை அவமதிப்பதாக தெரிவித்தனர். மேலும் சிங்கங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதி அக்பர் மற்றும் சீதா என்று பெயரிடப்பட்ட சிங்கங்களின் பெயர்களை மாற்றுமாறு மேற்குவங்க அரசுக்கும் உயிரியல் பூங்கா நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டார். மேலும் வனவிலங்குகளுக்கு பெயர் சூட்டும் போது இந்து முஸ்லிம் கிறிஸ்தவ மதம் சம்பந்தப்பட்ட பெயர்களையோ மதத்தின் போராளிகளின் பெயர்களையோ வைக்க கூடாது எனவும் அறிவுறுத்தி இருக்கிறது இந்தத் தீர்ப்பின் மூலம் ஒரு ஓரமாக நடந்து வந்த சர்ச்சைக்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது.

English Summary: The Kolkata High Court orders state govt and zoological park administration to rename the lions Akbar and Sita.

Read More:Facebook’ காதலரை மணந்த பெண் 6 மாதத்தில் தற்கொலை.! ஆர்.டி.ஓ விசாரணை.!

Next Post

"காங்கிரஸ், ஆம் ஆத்மியின் I.N.D.I.A கூட்டணி தலைநகரில் MODI மேஜிக்கை தடுக்குமா.?" - கடந்த தேர்தல்களின் முழு விவரம்.!

Thu Feb 22 , 2024
MODI: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் டெல்லியில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.  தேசிய தலைநகரில்  காங்கிரஸ் கட்சிக்கு மூன்று நாடாளுமன்ற இடங்களை விட்டுக்கொடுக்க ஆம் ஆத்மி ஒப்புக்கொண்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி கட்சியும்  வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் தலைநகர் டெல்லியில் இணைந்து போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. டெல்லியில் உள்ள ஏழு பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 3 […]

You May Like