fbpx

முள்ளங்கி இலைகளை இனி தூக்கி போடாதீங்க..!! நம்ப முடியாத எக்கச்சக்க நன்மைகள்..!!

குளிர்காலத்தில் முள்ளங்கி அதிக அளவில் கிடைக்கக்கூடிய ஒரு காய்கறியாகும். இந்த வேர் காய்கறியை சாலட், சாம்பார் போன்ற குழம்பு வகைகளில் சமைத்து சாப்பிடலாம். இதன் இலைகள் பல்வேறு ஆரோக்கிய நலன்களின் களஞ்சியமாக விளங்குகின்றன. நீங்கள் வழக்கமான முறையில் முள்ளங்கி இலைகளை சாப்பிட்டு வந்தால் பல்வேறு விதமான நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

முள்ளங்கி இலைகளில் புரோட்டின், சோடியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், கார்போஹைட்ரேட், குளோரின், வைட்டமின் A, B மற்றும் C போன்ற பல்வேறு விதமான ஊட்டச்சத்துகள் பைல்ஸ், ரத்த சர்க்கரை போன்ற நாள்பட்ட நோய்களை எதிர்த்து போராடக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கின்றன. இந்த இலைகள் இதய நோய்களை விரட்டக்கூடிய தன்மை கொண்டவை. இதனால் வரை முள்ளங்கி இலைகளை நீங்கள் தூக்கி வீசக்கூடிய ஒரு நபராக இருந்தால், அவ்வாறு செய்யக்கூடாது என்பதற்கான ஒரு சில காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பைல்ஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு முள்ளங்கி இலைகள் ஒரு வரப் பிரசாதமாகவே அமைகிறது. இது உடலில் ஏற்படக்கூடிய வீக்கத்தை குறைப்பதன் மூலமாக பைல்ஸ் நோயிl இருந்து நிவாரணம் தருகிறது. முள்ளங்கி இலைகள் குறைவான கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டவை. மேலும், முள்ளங்கி இலையில் வைட்டமின் C மற்றும் பீட்டா கரோட்டின் இருப்பதால் இது உடலின் தேவையை பூர்த்தி செய்கிறது.

ரத்த சர்க்கரையை குறைக்கிறது :

சமீப காலமாகவே பலர் ரத்த சர்க்கரை பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஒருவேளை நீங்களும் ரத்த சர்க்கரை பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய ஒருவர் என்றால், உங்கள் உணவில் முள்ளங்கி இலைகளை தினமும் சேர்த்து சாப்பிடுவது உங்களுக்கு பலனளிக்கும். ஏனென்றால், இதில் இருக்கக் கூடிய ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள வெள்ளை செல்களை அதிகரிக்க செய்கிறது. அதுமட்டுமின்றி, முள்ளங்கியில் குறைவான கிளைசிமிக் எண் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு பாதிக்கப்படாது. மேலும், ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை இது கட்டுப்படுத்துகிறது. உங்களுடைய உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கு விரும்பினால் நீங்கள் தினமும் முள்ளங்கி இலைகளை சாப்பிடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய அரிப்பு, தடிப்பு, எரிச்சல், முகப்பரு போன்றவற்றை தவிர்க்கிறது.

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது :

குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு முள்ளங்கி இலைகள் சாப்பிடுவது உதவக்கூடும். இதில் காணப்படும் போதுமான அளவு சோடியம் உடலின் உப்பு குறைபாட்டை பூர்த்தி செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி :

வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தினமும் முள்ளங்கி இலைகளை சாப்பிடுவது பலன் கிடைக்கும். முள்ளங்கி இலைகளில் இரும்பு சத்து மற்றும் பாஸ்பரஸ் ஏராளமாக கொட்டி கிடக்கிறது. மேலும், ரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்கிறது.

Chella

Next Post

23-ம் தேதி இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்...! ஆட்சியர் அறிவிப்பு....!

Sat Jan 20 , 2024
23-ம் தேதி இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 23.01.2024 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற […]

You May Like