fbpx

முட்டை வேக வைத்த தண்ணீரை இனி மறந்தும் கீழ கொட்டாதீங்க.. உண்மை தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிருவீங்க..

பொதுவாக நாம் முட்டைகளை வேகவைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடுவோம். ஆனால் முட்டை எவ்வளவு முக்கியமானதோ அதே அளவிற்கு முட்டைகளை வேகவைத்த நீரும் முக்கியத்துவம் வாய்ந்தது தான். ஆம், முட்டைகளை வேகவைத்த தண்ணீரில் பல நன்மைகள் உள்ளது. அன்றாட வீட்டு வேலைகளில் முட்டை வேகவைத்த தண்ணீரை பெரிதும் உதவும். அந்த வகையில், முட்டை வேகவைத்த நீரை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள், முட்டையை வேகவைத்த நீரிலும் உள்ளது. முட்டைகளை வேகவைக்கும் போது, முட்டை ஓடுகளில் இருந்து ஒரு சில ஊட்டச்சத்துக்கள் வெளியேறும். இதனால் முட்டை வேகவைத்த நீரில், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் சிறிய அளவு பாஸ்பரஸ் இருக்கும். இதனால் இந்த நீரை குளிரவைத்து, வீட்டில் வளர்க்கும் தாவரங்களுக்கு ஊற்றலாம். இதனால், உங்கள் தாவரங்களின் மண்ணின் தரத்தை மேம்படுத்த முடியும்.

மேலும், இந்த நீரில் உள்ள கால்சியம் செடியின் வேர் வளர்ச்சியை ஆதரிக்கிறது. அது மட்டும் இல்லாமல், அந்த தண்ணீரில் உள்ள மெக்னீசியம், குளோரோபில் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உங்கள் வீடுகளில் வளரும் செடிகள், பசுமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த முட்டை வேகவைத்த தண்ணீர், செடிக்கு மட்டும் இல்லாமல் உங்கள் முடிக்கும் நல்லது. இது கேட்பதற்கு வினோதமாகத் தோன்றலாம், ஆனால் இது உண்மை.

முட்டை வேக வைத்த நீரைப் பயன்படுத்தி, நீங்கள் உங்கள் தலைமுடியை அலசலாம். ஏனென்றால், இந்த தண்ணீரில் உள்ள தாதுக்கள் முடியை வலுப்படுத்துவது மட்டும் இல்லாமல், பொடுகைக் குறைக்கவும், பளபளப்பான, ஆரோக்கியமான முடியை பெறவும் உதவும். இந்த தண்ணீரை, தலைக்கு குளித்தப் பிறகு இறுதியாக முடியை அலச பயன்படுத்த வேண்டும். இது உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடிக்கு நல்லது. வாரம் இரு முறை நீங்கள் இப்படி செய்து வந்தால், உங்கள் முடி மென்மையாவதை நீங்களே உணர முடியும்.

வேகவைத்த முட்டை நீரில் கார தன்மை இருப்பதால், இந்த தண்ணீர் கிரீஸ் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்ய உதவும். மேலும், சமையலறை மேற்பரப்புகள், அடுப்புகளை சுத்தம் செய்யவும், எச்சங்களை சுலபமாக துடைக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.

Read more: இந்த ரகசியத்தை மட்டும் தெரிஞ்சுக்கோங்க, இனி நீங்க வீட்டில் சுடும் பூரி புஸ்ஸுன்னு மட்டும் தான் இருக்கும்..

English Summary

dont waste egg boiled water as its has many benefits

Next Post

வெறும் வயிற்றில் வெல்லம் கலந்த தண்ணீர்..!! ஆச்சரியமான நன்மைகள்..!! கண்டிப்பா நீங்களும் டிரை பண்ணி பாருங்க..!!

Wed Jan 29 , 2025
Drinking jaggery water on an empty stomach early in the morning can boost your immunity.

You May Like