fbpx

தேர்தல் ஆணையம் அதிரடி…! வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணி…! முழு விவரம்…

இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 1 மட்டுமல்லாது ஏப்ரல் 1, ஜுலை 1 மற்றும்‌ அக்டோபர்‌ 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும்‌ நாட்களில்‌ இளைஞர்கள்‌ அவர்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது. இனி, ஒவ்வொரு காலாண்டிலும்‌ வாக்காளர்‌ பட்டியல்‌ புதுப்பிக்கப்படும்‌ மற்றும்‌ 18 வயதுநிறைவடைந்த ஆண்டின்‌ அடுத்த காலாண்டில்‌ தகுதியான இளைஞர்கள்‌தங்களைப்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்சேர்க்கைக்குப்‌ பிறகு, உரியவருக்கு வாக்காளர்‌ புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்‌. 01.07.2023-ஐ தகுதியேற்படுத்தும்‌ நாளாகக்‌ கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொடர்‌ திருத்தக்‌ காலம்‌, 2023 (காலாண்டு 3)-இன்‌வாக்காளர்‌ பட்டியல்‌ 10.07.2023 அன்று (வெளியிடப்பட்டுள்ளன. மேற்கண்ட தொடர்‌ திருத்தக்‌ காலம்‌, 2023 (காலாண்டு 3)-இன் போது வாக்காளர்‌ பட்டியலில்‌ புதிய வாக்காளர்களாக 1,39,108 நபர்களின்‌ பெயர்கள்‌ சேர்க்கப்பட்டுள்ளன மற்றும்‌ 27,332 வாக்காளர்கள்‌ ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு முகவரி மாற்றம்‌ செய்துள்ளனர்‌. 3,42,185 வாக்காளர்களின்‌ பெயர்கள்‌ இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும்‌ இரட்டைப்‌ பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. மேலும்‌, 1,04,147வாக்காளர்களின்‌ பதிவுகளில்‌ திருத்தங்கள்‌ மேற்கொள்ளப்பட்டன.

Vignesh

Next Post

பெற்றோர்களே!... வந்தாச்சு மழைக்காலம்!... உங்கள் குழந்தைகள் வெளியே விளையாடச் செல்லும் முன் கவனிக்கவேண்டியவை!

Thu Jul 13 , 2023
உங்கள் குழந்தைகள் இந்த மழைக்காலத்திற்கு வெளியே விளையாட வேண்டும் என்று வற்புறுத்தினால், அவர்களை வெளியில் விளையாட அனுப்பும் முன் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். கொசுக்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, தண்ணீர் இருக்கும் இடங்களில் விளையாடுவதைத் தடுக்க வேண்டும். ஏனெனில் அத்தகைய இடங்களில் கொசுக்கள் அதிகமாக வளரும். குழந்தைகள் வீட்டிற்கு வெளியே விளையாடச் செல்லும்போது அல்லது சிறிது நேரம் நடைபயிற்சி செல்லும்போது, கண்டிப்பாக கொசுகளை எதிர்க்க கிரீம் அல்லது லோஷன் […]
மழை

You May Like