fbpx

தாமிரத் தயாரிப்புக்கு’ தரக் கட்டுப்பாட்டு…! மீறினால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்…! மத்திய அரசு உத்தரவு….!

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இந்தியத் தர நிர்ணய நிறுவனம் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து தரக் கட்டுப்பாட்டு ஆணையை அறிவிப்பதற்கான முக்கிய தயாரிப்புகளை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, அடையாளம் கண்டு வருகிறது. இது 318 தயாரிப்புத் தரங்களை உள்ளடக்கிய 60-க்கும் அதிகமான புதிய தரக் கட்டுப்பாட்டு ஆணைகளின் மேம்பாட்டுக்கு வழிவகுத்தது.

இது தாமிரத் தயாரிப்புகளின் 9 தரங்களை உள்ளடக்கியது.தாமிரம் மற்றும் அதன் உலோகக் கலவைகள் மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், தொலைத்தொடர்பு, மின்சுற்றுகள் மற்றும் பல உபகரணங்களில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, தாமிரப் பொருட்கள் சிறந்த தரத்துடன் இருக்க வேண்டும், அதன் தூய்மை எந்த வகையிலும் சமரசம் செய்யப்படக்கூடாது.

இ-அரசிதழில் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்கள் முடிவடைந்தவுடன் இந்த ஆணைகள் நடைமுறைக்கு வரும். உள்நாட்டு சிறு/ குறுந்தொழில்களைப் பாதுகாக்கவும், தொழில் தொடங்குவதை எளிதாக்கவும் இது உதவும். இந்தியத் தர நிர்ணய சட்டத்தின் விதியை மீறினால் முதல் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம். இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த குற்றங்களுக்கு, அபராதம் குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாகவும் அல்லது பொருட்களின் மதிப்பை விட பத்து மடங்கு வரையும் விதிக்கப்படும்.

Vignesh

Next Post

PAKvsAFG: சூ லேஸ் கட்ட வந்த நபி..! பாபர் அசாம் செய்த செயல்! சுவாரசியமான சம்பவம்...

Tue Oct 24 , 2023
நேற்றைய ஆஃப்கானிஸ்தான் – பாகிஸ்தான் போட்டியில் நிகழ்ந்த சுவாரஸியமான சில சம்பவங்கள் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவில் நடைபெற்றுவருவதால் ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டுரசித்து வருகின்றனர். விறுவிறுப்புடன் ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் சாதனைகளை நிகழ்த்திவருவது உள்ளிட்ட ஏதாவது ஒரு சுவாரஸியமா […]

You May Like