fbpx

பி.டி.ஆரை சந்தித்து மன்னிப்பு கோரிய டாக்டர் சரவணன்..! பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு..!

நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக நிதியமைச்சரை சந்தித்து மன்னிப்புக் கோரிய டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசினர். இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.

பி.டி.ஆரை சந்தித்து மன்னிப்பு கோரிய டாக்டர் சரவணன்..! பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு..!

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ”பாஜகவில் எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை. எனது மனதில் உள்ள விஷயத்தை அமைச்சரிடம் தெரிவித்தேன். நான் பாஜக கட்சியில் தொடரவில்லை. இனி தொடரப்போவதும் இல்லை. சுயமரியாதையுடன் இருக்க வேண்டும். திமுகவில் இணைவது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. நான் திமுகவில் இணைந்தாலும் தவறில்லை. திமுக தாய் வீடு தானே. 10-15 ஆண்டுகளாக நான் உழைத்த கட்சி திமுக” என தெரிவித்தார்.

பி.டி.ஆரை சந்தித்து மன்னிப்பு கோரிய டாக்டர் சரவணன்..! பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு..!

திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன் அக்கட்சியில் இருந்து விலகி கடந்தாண்டு பாஜகவில் இணைந்தார். அவர் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து நீக்கம்..! அண்ணாமலை அறிவிப்பு

Sun Aug 14 , 2022
மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன், கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த […]
மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து நீக்கம்..! அண்ணாமலை அறிவிப்பு

You May Like