fbpx

வாகன ஓட்டிகளே உஷார்..!! இப்படித்தான் ஏமாந்து போறீங்க..!! பெட்ரோல் போடும்போது இதை கவனிச்சிருக்கீங்களா..?

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் பெட்ரோல், டீசல் திருட்டு அன்றாடம் நடக்கும் வாடிக்கையான ஒரு விஷயமாகவே மாறிவிட்டது. பங்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும் போது மக்கள் தங்கள் கவனத்தை பெட்ரோல் மெஷினில் உள்ள ஜீரோவின் மீதே வைக்கின்றனர். கொடுக்கப்படும் தொகைக்கு சரியான அளவில் பெட்ரோல் நிரப்பப்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள ஜிரோ பார்ப்பதை மக்கள் தவறுவதில்லை.

ஆனால், ஜீரோ பார்க்கப்பட்டாலும் பெட்ரோல் திருட்டு நடக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை நீங்கள் என்றாவது உணர்ந்துள்ளீர்களா..? பெட்ரோல் நிரப்பப்படும் போது பூஜ்ஜியத்தில் கவனம் செலுத்தினால் மட்டும் போதாது, நீங்க மனதில் வைத்துக்கொள்ளவேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்களும் இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்களையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லையெனில், பெட்ரோல் திருடப்படுவதோடு உங்கள் பணமும் லட்சக்கணக்கில் வீணாகும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும் முன் எந்தெந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பது குறித்து மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த ட்வீட்டில், “நுகர்வோர் கவனத்திற்கு, பெட்ரோல் மற்றும் டீசலை நீங்கள் நிரப்புவதற்கு முன், இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். மீட்டர் ரீடிங் 0.00 ஆக இருக்க வேண்டும். விநியோக இயந்திரத்தின் சரிபார்ப்பு சான்றிதழ் காட்டப்பட வேண்டும். நீங்கள் விரும்பினால், பெட்ரோல் பம்பில் கிடைக்கும் 5 லிட்டர் அளவுகோலைப் பயன்படுத்தி நிரப்பப்பட்ட அளவை சரிபார்த்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டால், நுகர்வோர் சட்ட அளவியல் அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். அல்லது தேசிய நுகர்வோர் உதவி எண் 1915-க்கு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம் என்று நுகர்வோர் விவகாரத் துறை மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. பெட்ரோல் பம்பில் நீங்கள் பூஜ்யத்தை பார்க்க மறந்துவிட்டால் பெட்ரோல் நிரப்புபவர் உங்களுக்கு பெட்ரோலைக் குறைவாக ஊற்றலாம். ஆனால் பெட்ரோலின் டென்சிட்டியில் ஏதேனும் மோசடி இருந்தால், உங்கள் பணம்தான் வீணாக்கப்படுகிறது.

Chella

Next Post

விவசாயிகளை கோடீஸ்வரர்களாக மாற்றும் மருத்துவ செடிகள்..!! லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்..!!

Mon Nov 20 , 2023
இயற்கை மற்றும் தனித்துவமான மருத்துவ தாவரங்கள் பலவிதமான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது விவசாயிகளுக்கு வருவாயை உருவாக்கித் தருகின்றன. இந்த தாவரங்கள் மருந்து, ஒப்பனை பொருட்கள் மற்றும் மருந்துத் துறையில் பயன்படும் மூலப்பொருட்களை வழங்குகின்றன. பிற பாரம்பரிய மற்றும் வணிக பயிர்களுடன் ஒப்பிடும்போது, நறுமணம் மற்றும் மருத்துவ குணம் கொண்ட தாவரங்களை வளர்ப்பதன் மூலம் நல்ல வருவாயை விவசாயிகள் ஈட்ட முடியும் என்பதுதான் உண்மை. தற்போது வளர்ந்து […]

You May Like