fbpx

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ட்ரோன்…..பறந்து சென்று உறுப்பை மருத்துவமனையில் சேர்க்கும்…..

 

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு உறுப்புகளை எடுத்துச் செல்ல மருத்துவ உதவிக்காக ட்ரோன் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் தனியார் நட்சத்திர விடுதியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவும் வகையிலான ட்ரோன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறுவை சிகிச்சையின்போது உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகவும் , வான் வழியாகவும் கொண்டு செல்லும் ட்ரோன் தொழில்நுட்பத்தை எம்.ஜி.எம். மருத்துவமனை அறிமுகப்படுத்தியது. இதனை காணொலிக்காட்சி மூலம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார் .

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மா . சுப்பிரமணியன் கூறுகையில் , உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின்போது தனியார் மருத்துவமனைகள் உதவிக்கு முன்வர வேண்டும். இருதய மாற்று, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை எம்.ஜி.எம். மருத்துவமனையுடன் இணைந்து முக்கிய அரசு மருத்துவமனைகளுக்கு அரசாங்கத்தின் மூலம் , உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்  என கேட்டுக் கொண்டார்.

காணொளியில் காட்சிப்படுத்தப்பட்ட ட்ரோன் உறுப்புகளை தூக்கிக் கொண்டு விரைவாகவும் சரியான நேரத்திலும் இலக்கை அடையும். சாலை வழியை விட இது மிகவும் துரிதமான நேரத்தில் வந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Post

விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி..குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000... ஆம் ஆத்மி அதிரடி சரவெடி வாக்குறுதி....

Sat Sep 3 , 2022
குஜராத் தேர்தலில் வாக்கு அளித்து வெற்றி பெறச் செய்தால் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி வழங்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். குஜராத்தில் நடந்த பிரசாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். ஆம் ஆத்மி கட்சியை மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் […]

You May Like