fbpx

போதைக்கு அடிமை..!! பெற்ற தாயின் கழுத்தை அறுத்த மகன்..!! ரத்த கரையை கழுவும்போது சிக்கிய சம்பவம்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசித்து வருபவர் சுபைதா (52). இவர், கணவனை இழந்த நிலையில், கூலி வேலை செய்து தனது ஒரே மகனான 30 வயது ஆஷிக்கை வளர்த்து வந்தார். 12ஆம் வகுப்பு முடித்ததும் ஆஷிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார். கல்லூரியில் அவருக்கு போதைப்பழக்கம் ஏற்பட்டதால், அடிக்கடி தாய் சுபைதாவிடம் பணம் கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார்.

இதற்கிடையே, கல்லூரி படிப்பை முடித்த ஆஷிக், சொந்தமாக எலட்ரிக் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், ஆஷிக்கின் போதை பழக்கம் அதிகமானதால், அவரை குடும்பத்தினர் ஒதுக்க ஆரம்பித்தனர். பிறகு ஆஷிக் முழுநேர போதைப்பழக்கத்திற்கு அடிமையானார். அதனால், சுபைதா அவரை போதை தடுப்பு மையத்தில் இருமுறை சேர்த்துள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் போதை தடுப்பு மையத்திலிருந்து வெளியே வந்த ஆஷிக், மீண்டும் போதைக்கு அடிமையாகி இருக்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக ஆஷிக் அவர் மீதே வெறுப்புக்கொள்ள ஆரம்பித்தார். தான் இந்த உலகத்தில் பிறந்ததற்கு காரணம் சுபைதா, என நினைத்த ஆஷிக் தாயின் மீது வெறுப்புற்று அவரை இருமுறை கொலை செய்யவும் முயன்றுள்ளார். இந்நிலையில், சுபைதாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே அவர் தனது சகோதரியான ஷகிலா வீட்டில் சில நாட்களாக தங்கியிருந்தார். இச்சம்பவம் நடந்த நாளில் ஆஷிக் போதையில் தனது தாயை கொலை செய்ய நினைத்து பக்கத்து வீட்டில் தேங்காய் உரிக்க கத்தி வேண்டும் என கேட்டு வாங்கியுள்ளார்.

தனது சித்தி வீட்டில் தங்கியிருந்த தாயை சரமாரியாக கழுத்தில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே சுபைதா பரிதாபமாக இறந்தார். பின்னர், ரத்தம் படிந்த கத்தியையும், கைகளையும் வீட்டின் முற்றத்தில் உள்ள குழாயில் கை கழும்போது அக்கம்பக்கத்தின் பார்த்து சந்தேகமடைந்து ஆஷிக்கை பிடித்தனர். பின்னர், போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : Gold Rate | இன்று ஒரு சவரன் தங்கம் எவ்வளவு..? நகை வாங்கலாமா..? விலை நிலவரம் இதோ..!!

English Summary

On the day of the incident, Ashiq was drunk and thought of killing his mother, so he asked for a knife to peel coconuts from a neighbor’s house.

Chella

Next Post

நீங்களும் காலையில் பல அலாரம்களை வைத்து எழுகிறீர்களா..? அது எவ்வளவு ஆபத்துன்னு தெரியுமா..?

Tue Jan 21 , 2025
Doctors say you shouldn't set multiple alarms in the morning,

You May Like