முருங்கை- காய்,இலை என இரண்டுமே உடலுக்கு பல நன்மைகளை தர கூடியது. பல சத்துக்களை கொண்ட இந்த முருங்கையின் விலை மிகவும் மலிவு. அதனால் தானோ என்னவோ இதை பலர் உதாசினப் படுத்துகின்றனர். ஆம், முருங்கை இலைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என பல சத்துக்கள் உள்ளது. இத்தனை நன்மைகளை கொண்ட இந்த இலைகளை, நீங்கள் உங்கள் உணவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பல நோய்களை தடுக்க முடியும். குறிப்பாக, முருங்கை இலைகளில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், அது வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தும். இதனால் நாம் அதிகம் சாப்பிடுவதை தவிர்த்து உடல் எடையை குறைக்க உதவும்.
முருங்கை இலைகளில், நம் உடலுக்கு தேவையான மிக முக்கியமான சத்துக்கலான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிக அளவில் உள்ளது. பல பெண்களுக்கு இருக்கும் பிரச்சனையான இடுப்பு வலி,முதுகு வலிக்கு இது ஒரு நல்ல மருந்து. உடல் பெலவீனம் காரணமாக மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால், முருங்கை இலையை தொடர்ந்து சாப்பிடுங்கள். ஆம், ஏனென்றால் முருங்கை கீரையில் உள்ள ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும். மேலும், முருங்கை இலைகளில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதன் மூலம், சளி, இருமல் போன்ற தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிடுவதால், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். முருங்கை இலையில் உள்ள பொட்டாசியம் மற்றும் கால்சியம், இரத்த ஓட்டத்தை பராமரித்து இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் முருங்கை கீரை மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கை கீரையை, அடிக்கடி அவர்களின் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Read more: