fbpx

தொடரும் பரபரப்பு…! பிபிசி ஆவணப்படத்தை திரையிட முயன்ற 24 மாணவர்கள் கைது…! காவல்துறை விளக்கம்…!

மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட முயன்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் 24 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களாக போராட்டங்கள் அடுத்த வருகின்ற. அதை தொடர்ந்து தற்பொழுது டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவர்களும் திரையிட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு வெளியே இந்திய தேசிய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 24 மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களை போலீசார் கைது செய்தனர். வாடிக்கைக்கு எதிராக பல்வேறு கண்டன குரல்கள் எழுந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதாக போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

Vignesh

Next Post

எல்லையில் சீனா செய்து வரும் செயல்.. லடாக் காவல்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

Sat Jan 28 , 2023
எல்லையில் ராணுவ உள்கட்டமைப்பை சீனா மேம்படுத்துவதால், இமயமலைப் பகுதிகளில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல்கள் அதிகரிக்கக்கூடும் என்று லடாக் காவல்துறை தெரிவித்துள்ளது.. இந்தியா-சீனா எல்லை முறையாக வரையறுக்கப்படாததால், இரு நாடுகளுக்கு இடையே எல்லைக் கோடு குறித்து கருத்து வேறுபாடு நிலவுகிறது.. இதனால் எல்லைப் பகுதியில் அவ்வப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்படுகிறது… அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு எல்லையில் அமைந்துள்ள கல்வான் […]

You May Like