பிரபல தென்னிந்திய டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தி மாரடைப்பு காரணமாக காலமானார்.
பிரபல தென்னிந்திய டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சிங்கம் திரைப்படத் தொடரில் சூர்யாவின் கேரக்டருக்கு டப்பிங் பேசி பிரபலமானவர் மூர்த்தி. விஸ்வாசத்தில் அஜித் குமார், ஜனதா கேரேஜில் மோகன்லால், அல வைகுந்தபுரமுலுவில் ஜெயராம், ஓகேக்காடு படத்தில் அர்ஜுன், உபேந்திரா என பல தெலுங்கு அல்லாத நடிகர்களுக்கு அவர் டப்பிங் செய்துள்ளார்.
மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோருக்கு அவர்களின் தெலுங்கு டப்பிங் திரைப்படங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க ஹாலிவுட் படங்களுக்காக அவர் டப்பிங் செய்துள்ளார். டப்பிங் கலைஞராக அவர் சமீபத்தில் மாதவன் படத்தில் பணியாற்றி இருந்தார். என்ன நிலையில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்த சம்பவம் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியையும் பேரிழப்பையும் உண்டாக்கியுள்ளது .