திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த ஒருவர் தனது மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மனமுடைந்த நிலையில் தனது இரண்டு மகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்துள்ளார். இந்த சம்பவத்தில் அவரது மூன்று மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இவரும் இரண்டாவது குழந்தையும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியைச் சார்ந்தவர் சிவக்குமார் சத்யா தம்பதி. இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள். சத்யா மற்றும் சிவராமன் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் வாக்குவாதமும் ஏற்பட்டு வந்துகிறது. இந்த நிலையில் நேற்று மாலை கணவருக்கும் மனைவிக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது இதனைத் தொடர்ந்து தனது மூத்த மகளை அழைத்துக் கொண்டு தனது தாயின் வீட்டிற்கு சென்று விட்டார் மனைவி சத்யா .
இந்நிலையில் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வீட்டில் வசித்து வந்திருக்கிறார் சிவகுமார். மனைவியுடன் சண்டை போட்டதால் மிகவும் மனவேதனையிலிருந்த அவர் தனது இரண்டு மகள்களையும் கொலை செய்து விட்டு தானும் கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதற்காக உணவில் விஷத்தை கலந்து தனது இரண்டு குழந்தைகளையும் சாப்பிட வைத்துவிட்டு தானும் விஷம் குடித்து மயங்கி உள்ளார். இது தொடர்பாக குழந்தைகளை ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களது கை குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இரண்டாவது மகளும் சிவக்குமாரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.