fbpx

ஐயையோ.! 200 வருஷத்துக்கு அப்புறம் பூமியில் யாருமே இருக்க மாட்டாங்களா.! பிரிட்டிஷ் ஆய்வாளரின் அதிர்ச்சி தகவல்.!

சூரியனைச் சுற்றி இருக்கும் ஒன்பது கிரகங்களிலும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியான ஒரே கிரகமாக இருப்பது பூமி தான். ஆனால் தற்போது மாறிவரும் இயற்கை சூழலில் இன்னும் இருநூறு ஆண்டுகளில் பூமியும் மற்ற கிரகங்களைப் போல மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதி இல்லாத ஒரு இடமாக மாறிவிடும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பூமி வெப்பமயமாதல் பற்றி பிரிட்டன் சுற்றுச்சூழல் மற்றும் நீராவி மையத்தின் ஆராய்ச்சியாளரான டாக்டர் நிக்கோலஸ் கோவன் என்பவர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். அவரது ஆய்வின் முடிவில் வெளியாக இருக்கும் தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இந்த ஆய்வின்படி மனிதர்கள் அதிக அளவு மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடுகளை வெளியிடுவதால் பூமி வெப்பமடைவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த அதிக வெப்பத்தின் காரணமாக கடல் வேகமாக ஆவியாகி வருகிறது.

இந்த நீராவி பூமியை சூழ்ந்து கொள்கிறது. இதன் காரணமாக பூமியின் வெப்பம் வளிமண்டலத்திற்கு செல்லாமல் பூமியிலேயே தங்கி விடுகிறது. இந்த அதிக வெப்பநிலையின் காரணமாக 200 ஆண்டுகளில் கடல்கள் அனைத்தும் முழுவதுமாக வற்றிவிடும். பூமியின் அளவுக்கு அதிகமான வெப்பத்தால் பசுமை இல்லா வாயுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு சூரிய கதிர்வீச்சின் தாக்குதலும் அதிகமாகும். இதனைத் தொடர்ந்து பூமியும் வெள்ளி கிரகத்தைப் போல மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் அற்ற கிரகமாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவரது ஆய்வு முடிவுகள் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த 200 ஆண்டுகளில் பூமியிலும் எந்த உயிரினங்களும் இருக்காது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

Next Post

அடடா.! கண் பார்வை முதல் கொலஸ்ட்ரால் வரை.!அற்புதமான நன்மைகள் நிறைந்துள்ள பீன்ஸ்.!

Wed Dec 27 , 2023
உடலுக்கு நன்மை தரக்கூடிய காய்கறிகளில் பீன்ஸ் முக்கியமானது. பீன்ஸ் காய்கறியில் வைட்டமின்கள் ஏ, சி, கே, நார்ச்சத்துக்கள், ஃபோலேட் மற்றும் மாங்கனிஸ் ஆகியவை நிறைந்து இருக்கிறது. பீன்ஸில் நிறைந்து இருக்கக்கூடிய நார்ச்சத்து நம் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிப்பதோடு செரிமானத்தை மேம்படுத்துகிறது. பீன்ஸை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் அவற்றில் இருக்கும் நார்ச்சத்து நம் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை நல்ல சக்தியாக மாற்ற உதவுகிறது. பீன்ஸில் […]

You May Like