தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பெய்த கனமழை வளர்த்து சேதத்தை ஏற்படுத்தியது. இதிலிருந்து பொதுமக்கள் மீண்டு வருவதற்குள் தற்போது மீண்டும் கன மழை பெய்ய தொடங்கி இருக்கிறது.
நேற்று முதல் சென்னை செங்கல்பட்டு நாகப்பட்டினம் திருவாரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மேலும் அதிக மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
முதல்வரின் உத்தரவை தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். இது தொடர்பாக மாநில அவசர கட்டுப்பாட்டகத்தில் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர் மழை வெள்ளத்தால் சூழ்ந்திருக்கும் தாழ்வான பகுதிகளில் மோட்டார்களை பயன்படுத்தி வெள்ள நீர் வெளியேற்றப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொள்ளும் எனவும் தெரிவித்திருக்கிறார்.