கனமழை காரணமாக இன்று 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற செய்தி நேற்று மாலை இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்ற செய்தி பரவி வந்தது முற்றிலும் வதந்தியே. இதுவரை விடுமுறை ஏதும் அளிக்கவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விளக்கம் அளித்துள்ளார். இன்று நடைபெறவிருந்த பகுதி நேர பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.