fbpx

ஆன்லைன் பண பரிவர்த்தனை மோசடி.! 70 லட்சம் செல்போன் நம்பர்கள் சஸ்பெண்ட்.! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.!

நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மோசடிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மோசடியுடன் தொடர்புடைய 70 லட்சம் செல்போன் இணைப்புகளை இடைநீக்கம் செய்திருப்பதாக நிதி சேவைகள் துறை செயலாளர் விவேக் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.

அதிகரித்து வரும் இணையதள மோசடிகள் மற்றும் டிஜிட்டல் பணப்பருவத்தினை மோசடிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக தேசிய நிதி சேவைகள் செயலாளர் விவேக் ஜோசி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொருளாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தொடர்பு துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன.
கொல்கத்தாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் யூசிஓ வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளில் நடைபெற்று இருக்கும் பல கோடி கணக்கான ரூபாய் தொடர்பான பணப்பரிவர்த்தனை மோசடிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. யூசிஒ வங்கியில் இருந்து மட்டும் 820 கோடி ரூபாய் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மூலம் மோசடி நடந்திருப்பதாக சைபர் கிரைம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக வங்கிகள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மேலும் தற்போது இருக்கும் டிஜிட்டல் பண பரிவர்த்தன முறைகளில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வருவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. மேலும் ஆதார் கார்டை பயன்படுத்தி பணம் பரிவர்த்தனை செய்வது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது ஆன்லைனில் நடைபெறும் மோசடிகளை தடுப்பதற்காக இது போன்ற கூட்டங்கள் அடிக்கடி நடைபெறும் என செயலாளர் விவேக் ஜோசி தெரிவித்தார். இது தொடர்பான அடுத்த கூட்டம் ஜனவரி மாதம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Post

ஆண் குழந்தைக்கு 10 லட்சம்.! 60 குழந்தைகள் கடத்தல்.! 8 தமிழர்கள் கைது.! பதற வைக்கும் புள்ளி விவரம்.!

Wed Nov 29 , 2023
கர்நாடகாவையே அதிர வைத்த 60 குழந்தைகள் கடத்தல் சம்பந்தமாக எட்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன. கர்நாடக தலைநகரான பெங்களூர் நகரில் உள்ள ஆர் ஆர் நகரில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு தமிழர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் குழந்தையை விற்பனை செய்ய வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் […]

You May Like