fbpx

அனைத்து பள்ளி மாணவர்களும் இதை கட்டாயம் செய்ய வேண்டும்…! ஆசிரியர்களுக்கு உத்தரவு…!

போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான சமூக விழிப்புணர்வு பெறும் நோக்கில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ‘ போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக , பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று அனைத்துவகை பள்ளிகளிலும் , உயர் மற்றும் மேல்நிலை வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் அனைவரும் போதைப்பழக்கத்திற்கு எதிரான பெருந்திரள் உறுதிமொழி ஏற்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் , தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் உறுதிமொழி எடுக்கப்பட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்தவும் , நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் , நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் dad.ebcid@gmail.com மற்றும் இவ்வலுவலக மின்னஞ்சல் msectndse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் இன்று பிற்பகல் 4.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

https://enforcementbureautn.org/pledge என்ற இணைய இணைப்பினை பயன்படுத்தி மின்னணு உறுதிமொழி ஏற்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பதுடன் உறுதிமொழி ஏற்றமைக்கான மின்னணு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

Maya OS!... சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க இந்தியாவின் புதிய உள்நாட்டு OS மற்றும் சக்ரவ்யுஹ்!

Fri Aug 11 , 2023
சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க புதிய உள்நாட்டு Maya OS மற்றும் “சக்ரவ்யுஹ் கணினிகளில் நிறுவப்படவுள்ளது. முக்கிய அரசு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட புதிய இயங்குதளமான மாயா ஓஎஸ் அறிமுகம் மூலம் பாதுகாப்பு அமைச்சகம் அதன் இணைய பாதுகாப்பு உத்தியை புதுப்பித்து வருகிறது. மாயா ஓஎஸ் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. அதன் இணைய பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மாயா OS […]

You May Like