fbpx

தொழிலாளர் குறித்த தகவல்களை பதிவு செய்ய ரூ.20 மட்டுமே வசூல்…! மத்திய அரசு தகவல்…!

மக்களைவில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள மத்திய அமைச்சர் ரமேஷ்வர் தெலி , அமைப்பு சாரா தொழிலாளர்களின் விரிவான தரவை ஏற்படுத்த ஈ-ஷ்ரம் இணையதளத்தில் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றும் இதன் மூலம் அவர்கள் குறித்த அனைத்து தரவுகளும் இந்த தளத்தில் இடம் பெறுகின்றன.

தற்போது இந்த இணையதளத்தில் 28 கோடியே 62 லட்சத்து 55 ஆயிரத்து 105 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். பதிவுக்குப் பிறகு தொழிலாளர்களுக்கு தனிக்கணக்கு எண் அளிக்கப்படுகிறது. ஈ-ஷ்ரம் இணையதளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக பொது சேவை மையம் மற்றும் மாநில சேவை மையங்களில் ஒரு தொழிலாளர் குறித்த தகவல்களை பதிவு செய்வதற்கு ரூ.20-ஐ மத்திய அரசு வழங்குகிறது.

அதன்படி 2022 டிசம்பர் வரை பொது சேவை மையங்களுக்கு ரூ.347 கோடியும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 19.07 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது.மார்ச் 5, 2023 வரை தமிழ்நாட்டில் 83 லட்சத்து 86 ஆயிரத்து 619 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர் என்றார்.

Vignesh

Next Post

இவ்வளவு குறைந்த விலையா..? அமேசானின் அதிரடி ஆஃபர்கள்..!! இன்றே கடைசி..!!

Tue Mar 14 , 2023
ஹோலி பண்டிகைக்கு பிறகு வரும் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் சேல் என்ற ஆஃபரை அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் லேப்டாப்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், ஹெட்ஃபோன்கள், டேப்லெட்டுகள், கம்ப்யூட்டர் துணைக்கருவிகள், கேமராக்கள் என பல பொருட்கள் சலுகைகளில் வழங்கப்படுகின்றன. இந்த ஆஃபர் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இன்றுடன் (மார்ச் 14) முடிவடைகிறது. இந்த விற்பனையில் சாம்சங், ஆப்பிள், போட், ஃபயர்-போல்ட், லெனோவா, கேனான், சோனி என பல முன்னணி பிராண்டுகளின் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளை ஆஃபர் […]

You May Like