போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் இருந்து 112 கிமீ தொலைவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்; போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் இருந்து 112 கிமீ தொலைவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி 12:53 மணிக்கு தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் திங்கள்கிழமை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.