இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் இருந்து 27 கிமீ வட-வடமேற்கில் நேற்று இரவு 9.32 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நவம்பர் 6 ஆம் தேதி, 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தேசிய தலைநகர் மற்றும் அண்டை பிராந்தியங்களை உலுக்கியது. நேபாள எல்லையை ஒட்டிய உத்தரகாண்டில் உள்ள பித்தோராகருக்கு தென்கிழக்கே 90 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நேபாளத்தில் நிலநடுக்கத்தால் மூன்று பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.